Daily Archives: June 12, 2023

பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாததை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை: சச்சின் விமர்சனம் | I fail to understand the exclusion of ashwin in the playing XI

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11-ல் அஸ்வின் இடம்பெறாமல் போனதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தண்டாயுதத்தை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது சச்சின், ரவி சாஸ்த்ரி உள்ளிட்ட மூத்த கிரிக்கெட்டர்கள் மத்தியில்…

இந்தியாவில் புல்லட் ரயில்கள் பாதுகாப்பானதா? அதில் விபத்துகளை தவிர்க்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ராஜ்தானி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், புல்லட் ரயில் போன்ற ரயில்கள் தற்போது இந்திய ரயில்வேயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே மிதவேகத்திலிருந்து அதிவேக ரயில்களுக்கு மாறுவதைக் காண முடிகிறது.இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாட்டில் ரயில் போக்குவரத்து மிக முக்கியமானது. அதைக் கருத்தில் கொண்டு ரயில்களை நவீனமயமாக்குதல், வேகத்தை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் இந்திய ரயில்வே கவனம் செலுத்திவருகிறது.எனினும், சில நாட்களுக்கு முன் ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…

Doctor Vikatan – 16 September 2017 – டாக்டர் டவுட் – வாய்ப்புண் | Doctor Doubt – Stomatitis – Doctor Vikatan

வாய்ப்புண்ணைக் குணப்படுத்த சிகிச்சைகள் உள்ளனவா?சரியான உணவு முறைகளைக் கடைப்பிடித்தால், பெரும்பாலும் ஒரு வாரத்திலேயே குணமாகிவிடக் கூடிய ஒன்றுதான் வாய்ப்புண். சாதாரணமானது என்றால் மருத்துவர் ஆலோசனைப்படி, அவர் பரிந்துரைக்கும் ஆன்டிசெப்டிக் திரவத்தைப் பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். இதோடு `ஹீலிங் ஜெல்’ எனப்படும் வலி மரத்துப்போகச் செய்யும் ஜெல்களையும் பயன்படுத்தலாம். வலி நிவாரணி மற்றும் மருத்துவர் பரிந்துரைக்கும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் விரைவான தீர்வுக்கு வழிவகுக்கும். வாய்ப்புண்ணைத் தடுக்க வழிகள் ஏதும் உண்டா?வாயைச் சுத்தமாக வைத்திருப்பது என்பது வாய்ப்புண் வராமல் தவிர்ப்பதற்கான…

அக்.15-ல் இந்தியா – பாகிஸ்தான் மேட்ச்? – உலகக்கோப்பை வரைவு அட்டவணை வெளியீடு…

உலகக்கோப்பை தொடருக்கான வரைவு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி  தோல்வியடைந்துள்ளன நிலையில், அடுத்ததாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடரை எதிர்நோக்கியுள்ளது. ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்று 10 ஆண்டுகள் ஆகின்றன.இதனால் உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

குழந்தைகளுக்குப் பிடித்த வெரைட்டியான பர்கர் வீட்டிலேயே செய்ய வேண்டுமா..? இதோ ரெசிபி ..!

பர்கர் என்றாலே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டிஷ்களில் ஒன்றாக உள்ளதால் எப்போது கடைகளுக்குச் சென்றாலும் வாங்கிச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிக்கடி பீசா, பர்கர் போன்ற ரெசிபிகளைக் கடைகளில் சாப்பிடும் போது பல உடல் நல பிரச்சனைகளும் ஏற்படும். எனவே உங்கள் குழந்தைகளுக்குப் பிடித்த ரெசிபிகளை வீட்டிலேயே ஈஸியா செய்து சாப்பிடலாம். இதோ எப்படி செய்யலாம்? என இங்கே அறிந்துக் கொள்ளுங்கள்.பலாப்பழம் மற்றும் அவகோடா பர்கர் (Jackfruit and Avocado Burger):வெஜ், சிக்கன்,…

கனிமொழி பக்கம் செல்கின்றனர்… அண்ணாமலை விமர்சனம்

கருணாநிதியின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராகி இருக்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ’புதிய அமைச்சர்கள் கூட வாரிசுகளாக நியமிக்கப்படுவதால், திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறினார். எனவே அவர்கள் கனிமொழியின் பக்கம் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.ஆனால், பாஜகவில் ஒரு பூத் கமிட்டி நிர்வாகி கூட, உயர்ந்த பொறுப்பிற்கும் வர முடியும் என குறிப்பிட்டார். அத்துடன், தனித்…

Doctor Vikatan: ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான உணவா? | Doctor Vikatan: Is Oats a Healthy Food?

Doctor Vikatan: ஓட்ஸ் சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது…. அதில் உண்மையிலேயே சத்துகள் உள்ளனவா…. ஓட்ஸை எப்படிச் சாப்பிடுவது சிறந்தது?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரிஊட்டச்சத்து ஆலோசகர் புவனேஸ்வரி | சென்னைமற்ற தானியங்களோடு ஒப்பிடுகையில் ஓட்ஸில் ஊட்டசத்துகள் அதிகம் என்பதில் சந்தேகமில்லை. அதில் வைட்டமின்கள், தாதுச்சத்துகள், மற்றும் பீட்டா குளுக்கன் (beta-glucans) எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. அந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதால், குடல் செயல்பாடுகள் சீராக இருக்கும். ஓட்ஸை காலை…

Dhoni: ‘உலகக்கோப்பையை ஜெயிச்சதுக்கு தோனி மட்டும் காரணமில்ல..’ – ஆதங்கத்தை கொட்டிய ஹர்பஜன் சிங்!| WTC Finals : Harbhajan Singh’s tweet about Dhoni

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருந்தது. இதன் மூலம் 2013 க்குப் பிறகு இந்திய அணி ஐ.சி.சி கோப்பைகளை வெல்லவே இல்லை என்கிற சோக வரலாறும் தொடர்கிறது. இந்நிலையில், சமூகவலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் தோனியை புகழ்ந்து எழுதி வருகின்றனர். 2007 உலகக்கோப்பை வெற்றியைக் குறிப்பிட்டு, ‘அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளர் கூட இல்லை. அனுபவ வீரர்கள் ஆடுவதற்கே முன் வரவில்லை. அப்படி ஒரு சூழலில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை மட்டுமே கொண்டு…

வித்தியாசமான சுவைகளில் பொங்கல்! – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்பொங்கல்.. குழையக் குழைய, நெய்யும் மிளகு சீரகமும் மணக்க, முந்திரி மிதக்க பொங்கல் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது ? பொங்கல் செய்வது என்பது ஒரு கலை.. கஞ்சி மாதிரி ரொம்ப குழையக் கூடாது. அதேசமயம் பிரைட் ரைஸ் மாதிரி உதிரி உதிரியாகவும் இருக்கக் கூடாது…

சென்னை மருத்துவமனையில் நடிகை ரோஜா அனுமதி; கால் பிரச்னைக்கு சிகிச்சை! I Actress Roja Admitted To Chennai Hospital

ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தமிழில் இயக்கிய ’செம்பருத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக ரோஜா அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், பின்னர் தீவிர அரசியலில் இறங்கினார். ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட ரோஜா, தற்போது ஆந்திர பிரதேசத்தில்…