அதிமுக ஆட்சியில் நடந்த நிலக்கரி முறைகேடு குறித்து வழக்கு தொடர அனுமதி கிடைத்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி பேட்டி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:இந்தியாவுக்கு வழிகாட்ட கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது. 1962ம் ஆண்டு அண்ணா, திராவிட நாடு கொள்கையை ஒத்தி வைக்கிறேன் என்று கூறிய பிறகு, திமுகவை அகில இந்திய அளவில் திமுக தலைவர் கருணாநிதி கொண்டு சென்றார். இந்தியாவுக்கே வழிகாட்ட கூடிய மாநிலமாகவும், குடியரசு தலைவர் போன்ற முக்கிய பொறுப்புகளை நிர்ணயிக்கும் மாநிலமாகவும் தமிழகம் இருந்தது. இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை முதலில் தமிழக அரசியல்…








