காயம் காரணமாக ஐபிஎல் சீசனை மிஸ் செய்யப் போகும் பும்ரா? | indian fast bowler bumrah set to miss ipl 2023 season injury concern
பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் அபார வேகப் பந்துவீச்சாளர் பும்ரா, எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனை முழுவதும் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 29 வயதான பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் பிரதானமான வீரர். இவரது யார்க்கர்கள் எதிரணி வீரர்களின் திணற செய்யும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று பார்மெட்டிலும் விளையாடி வரும் வீரர்.…









