Doctor Vikatan: காய்ச்சல் அடிக்கும்போது குழந்தைகளுக்கு தயிர்சாதம் கொடுக்கலாமா?| Doctor Vikatan: Can you give curd rice to children when they have fever?
எனவே எப்போதும் வீட்டிலேயே ஃப்ரெஷ்ஷாக தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தாலே நோய் எதிர்ப்புத்திறன் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுங்கள். சூப் போன்ற திரவ உணவுகளைக் குடிக்கவும் பழக்குங்கள்.தயிரிலும் மோரிலும் உள்ள புரோபயாட்டிக் கிருமிகள் குடலுக்கு நன்மை செய்யக்கூடியவை. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவை. குழந்தைக்கு காய்ச்சலடிக்கும்போது தயிர், மோர் கொடுக்கலாமா என்று பல பெற்றோர் கேட்கிறார்கள். தாராளமாகக் கொடுக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்காத, அறை வெப்பநிலையில் உள்ள தயிர், மோர் கொடுப்பதில் பிரச்னையே இல்லை.காய்ச்சல்…








