அதிமுக எடப்பாடி, அதிமுக ஓ.பன்னீர்செல்வம், பாஜ கூட்டணியில் குழப்பம் நீடிப்பு தேர்தலில் தனியாக போட்டியிட எதிர்க்கட்சிகள் திட்டம்: ஜி.கே.வாசனுடன் அதிமுகவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை: கூட்டணியில் யார் பெரியவர்கள் என்பதில் எதிர்க்கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், தமாகா தலைவர் வாசனுடன், எடப்பாடி அணியினர் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி சார்பில் யுவராஜா போட்டியிட்டு ேதால்வி அடைந்தார். எனவே, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தமாகா போட்டியிட வேண்டும் என்று ஜி.கே.வாசன், கடந்த இரு நாட்களுக்கு முன்பு…
