ஊதிய ஒப்பந்த 6வது கட்ட பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்: பே மேட்ரிக்ஸ் முறை ஊதியம் அமல்? போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உறுதி
சென்னை: அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 3 முறையும் நடந்தது. இந்நிலையில், 6வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி…







