Daily Archives: December 13, 2022

FIFA WC 2022 | அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை – மாயாஜாலம் நிகழ்த்தப்போவது மெஸ்ஸியா, மோட்ரிச்சா? | Croatia aim to end Lionel Messis FIFA World Cup dream

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் இன்று நள்ளிரவு 12.30 மணி அளவில் தோகாவில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி அங்கம் வகிக்கும் அர்ஜெண்டினா அணி, லூக்கா மோட்ரிச்சின் குரோஷியாவை எதிர்த்து விளையாடுகிறது. 2018-ம் ஆண்டு ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 2-வது இடம் பிடித்த குரோஷியா இம்முறை கத்தாரில் கோப்பையை வெல்லக்கூடிய பிரதான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட பிரேசில் அணியை கால் இறுதி சுற்றில் அதிர்ச்சி…

கீரை வடை செய்ய தெரியுமா..? உங்களுக்கான ரெசிபி..

மாலை நேரத்தில் டீ, காபியுடன் சூடான வடை சாப்பிட அருமையாக இருக்கும். இன்று முருங்கை கீரை சேர்த்து மெது வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள்கீரை – 1 கட்டுஉளுந்து – 200 கிராம்கடலை பருப்பு – 50 கிராம்பச்சை மிளகாய் – 2இஞ்சி – 1 துண்டுசீரகம் – 1 1/2 டீஸ்பூன்உப்பு – சுவைக்குஎண்ணெய் – பொரிக்க தேவையான அளவுசெய்முறை1. முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற…

‘ஈட்டிக்காரனை விட இரக்கமற்றது ஒன்றிய அரசு’: புதிய பென்சன் திட்டம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கருத்து..!!

மதுரை: புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யும் எந்த யோசனையும் ஒன்றிய அரசிடம் இல்லை என சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருக்கிறார். ஈட்டிக்காரனை விட இரக்கமற்ற ஒன்றிய அரசு எனவும் சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். Source link

அதிமுக அறிவிப்பு 15 மாவட்டங்களில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு கண்டித்து அதிமுக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில்…

முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி… #PhotoGallery

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி இன்று தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளது. நன்றி

“முதல்வர் அடாவடியாகச் செயல்படாமல், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்!” – டிடிவி.தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, கண்டியூர் அருகே நடவு செய்யபட்ட வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. பின்னர் ஆர்.சி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.டிடிவி தினகரன்`அறுவடை முடியும் வரை சாலை பணிகள் நடைபெறாது. அதன் பிறகு நிச்சயம் சாலை அமைக்கபடும்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மூன்றாவது…

மாண்டஸ் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர் மாதம் பெய்த கன மழையினாலும் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: புயலை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. அனைத்துத்துறை ஊழியர்களும், அரசு அதிகாரிகளும், முன்களப் பணியாளர்களும் இப்பணியை மேற்கொண்டனர். இத்தகைய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது, இதற்கான…

“சச்சினின் சாதனையை கோலி முறியடிப்பது விஷயமல்ல, இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் தேவை!” – ரஷீத் லதீப் | Kohli’s record doesn’t matter, India needs title says Pakistan’s Rashid Latif

சில ஆண்டுகளில் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிப்பது எல்லாம் இந்திய அணிக்குத் தற்போது தேவையில்லை” என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீப் பேசியிருக்கிறார்.சச்சின் – விராட் கோலிCricket.com.auஇது தொடர்பாகப் பேசிய அவர், “சதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான நேரம் இது இல்லை. அது தேவையற்றதும் கூட. அவர்கள் (இந்தியா) தற்போது சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும். இந்திய அணி ஐ.சி.சி கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன. கோலி 100 சதம் அடிப்பதும், 200 சதம் அடிப்பதும் பெரிய…

காரசாரமான கர்நாடக சட்னி ரெசிபி… இட்லி, தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.!

காலை உணவு என்றாலே பெரும்பாலானோர் வீட்டில் அடிக்கடி செய்வது இட்லி, தோசை தான். அதற்கு பெரும்பாலும் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது தக்காளி சட்னி தான் மாற்றி மாற்றி செய்து சாப்பிடுமாறு இருக்கும். அப்படி இதே சட்னிகளை சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த கர்நாடக சட்னி கண்டிப்பாக பிடிக்கும்.இதை செய்ய தக்காளியை தவிர எதையுமே நறுக்க தேவை இருக்காது. சட்டுனு சுவையான கோலார் சட்னி என்றழைக்கப்படும் கர்நாடக ஸ்பெஷல் சட்னியின் சிம்பிள் ரெசிபி…

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதல் – பலர் படுகாயம் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப்படம்3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி இந்த மோதல் நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 9ஆம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் நுழைந்ததாகவும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்ததாகவும் இந்திய இராணுவம் பிபிசியிடம் தெரிவித்தது. இந்த மோதலில்…