`லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டாம்!’ – மருத்துவர்களுக்கு ICMR அறிவுறுத்தல்| No antibiotic for mild fever – Indian Council of Medical Research warns
லேசான காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது தவறானது. அதோடு நோயாளியை நேரடியாகப் பரிசோதித்தும், ஆய்வக பரிசோதனைகளை வைத்தும், நோயை உண்டாக்கிய கிருமிகளையும், என்ன நோய் என்பதையும் கண்டறிந்து அதற்கேற்றாற்போல, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான செப்சிஸ், செப்டிக் ஷாக், சமூக அளவில் பரவக்கூடிய நிமோனியா, வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் போது ஏற்பட்ட நிமோனியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக்…









