என் தாத்தாவை ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.. சவார்க்கர் பேரன் ஆதங்கம்
சுதந்திர போராட்ட வீரராகிய தனது தாத்தாவை அவமானப்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு தொடர உள்ளதாக வீர சாவர்க்கரின் பேரன் அறிவித்துள்ளார்.பாரத் ஜோடோ யாத்திரை மூலம் நாடு முழுவதும் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக மகாராஷ்ட்ரா மாநிலம் ஹங்கோலியில் கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியின போராளி பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டார்.அப்போது பேசிய ராகுல், 24 வயதில் நாட்டிற்காக தனது இன்னுயிரை கொடுத்த பிர்சா முண்டா வீர சாவர்க்கரைப் போல…








