IND vs ENG | ஹர்திக் பாண்டியாவின் மிரட்டல் பெர்பாமென்ஸ் – 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி | India won by 50 runs against england in 1st t20 match
சவுத்தாம்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் சவுத்தாம்டனில் இன்று தொடங்கியது. கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்றைய ஆட்டத்தில் அணியை வழிநடத்தினார். விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் 2-வது…









