அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் இன்று விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் தரப்புக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட அதிகாரமுள்ளது. வேறு…









