Monthly Archives: July, 2022

நியமன எம்பிக்களாக தென்னிந்தியர்களை தேர்வு செய்த பாஜக அரசு – ‘மிஷன் சௌத் இந்தியா’வின் ஒரு பகுதியா?

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்59 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @narendramodi/Twitter தென்னிந்தியாவின் நான்கு பிரபலமான ஆளுமைகள், குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு உட்பட்டு நியமிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவருமான இளையராஜா, விளையாட்டுத்துறையில் சாதனை படைத்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா (கேரளா), பிரபல தெலுங்குப்பட கதையாசிரியரும் இயக்குநருமான விஜயேந்திர பிரசாத் (ஆந்திர பிரதேசம்), கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெகடே ஆகியோரும் நியமன உறுப்பினர்களாக தேர்வாகின்றனர்.இந்த அறிவிப்பு வெளியான…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் ஈபிஎஸ்க்கு சரமாரி கேள்வி: பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்தது. வரும் 11ம் தேதி நடத்தப்பட உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த பிரச்னையில் நிவாரணம் தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியை நாடலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், கடந்த மாதம் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது தொடரப்பட்ட…

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி | malaysia masters badminton: pv sindhu wins 1st round

Last Updated : 07 Jul, 2022 06:27 AM Published : 07 Jul 2022 06:27 AM Last Updated : 07 Jul 2022 06:27 AM கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங்ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து 21-13, 17-21,…

side effects of cheese 5 harmful effects of eating too much cheese

சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள் . பாலாடைக்கட்டி என்பது பாலிலுள்ள புரதமான கேசீனை உறைய வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது கடைகளில் பல்வேறு வடிவங்களிலும் சுவைகளிலும் கிடைக்கிறது. பாலாடைக் கட்டி வெண்ணெயை விட அதிக வைட்டமின்கள் மற்றும் மினரல்களைக் கொண்டுள்ளது.100 கிராமில் பாலாடைக்கட்டியில் 349கி கலோரிகள் உள்ளன. சீஸ், பர்கர் முதல் கேக் வரை பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது, எனினும் சீஸ் உட்கொள்ளல் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பாலாடைக்கட்டி ஒரு…

Tamil News Live: புதுக்கோட்டையில் குண்டடிபட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

பிரதமர் மோடி தமிழகம் வருவதை  வரவேற்கிறோம் – அமைச்சர் நாசர் ஆவடியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாமை தமிழக தமிழக  பால் வளத்துறை அமைச்சர் நாசர் துவங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓமைக்ரான் பரவல் தடுப்பதற்காக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.மோடி தமிழக வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் மோடி வருவதை வரவேற்கிறோம் அவர் நல்ல காரியதிற்காக வருகிறார் எனவே வரவேற்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.…

தமிழகத்தை துண்டாடுவோம் நயினார் நாகேந்திரனுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: தமிழகத்தை துண்டாடுவோம் என்று பாஜ எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டைப் பாண்டிய நாடு, பல்லவ நாடு என்று இரண்டாகப் பிரிப்போம் என்றும், அதற்கான இடத்தில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் பாஜ சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஜவின் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரு மதம், ஒரே…

Doctor Vikatan: பாடி மசாஜ் செய்துகொள்வது உண்மையிலேயே பலன் தருமா? | Doctor Vikatan – Doctor explains benefits of body massage

சரியான நபர்களால் முறையாகச் செய்யப்படும்போது மசாஜ் அருமையான பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. உடல் அசதியாக இருக்கும்போது யாராவது நமக்கு கை, கால்களை அழுத்திப் பிடித்துவிட்டால் ஆனந்தமாக உணர்கிறோம் அல்லவா… அதுகூட ஒருவகையிலான மசாஜ்தான்.மசாஜ் என்பது தசைகளை, தசைநார்களை அழுத்தி, நீவிவிடுகிற ஒரு சிகிச்சை. அதில் மிதமானது முதல் அழுத்தமானது வரை பல வகை உண்டு. உடலை ரிலாக்ஸ் செய்து புத்துணர்வைத் தரும் ஸ்வீடிஷ் மசாஜ், அடிபட்ட பிறகு தசைகளையும் இணைப்புத் திசுக்களையும் அழுத்திப் பிடித்துச் செய்யப்படும்…

‘ஓர் இந்திய ஆளுமை…’- விம்பிள்டனில் பர்த் டே பாய் தோனி- வைரலான படம்

ஜூலை 7 ஆம் தேதி (வியாழன்) 41 வயதை எட்டிய தோனியின் படத்தை விம்பிள்டன் பகிர்ந்துள்ளது. “ஒர் இந்திய ஆளுமை… என்று அதில் எழுதப்பட்டிருந்தது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தன் டிவிட்டர் பக்கத்திலும் அதே படத்தை பகிர்ந்துள்ளது. மேலும், பேட்டிங் ஐகான் சுனில் கவாஸ்கரும் விம்பிள்டன் ரசிகர்கள் இடையே இருந்தார்.டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற…

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

மதுரை : மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான பிரமாண்ட அரங்கம் அமைக்க இடம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், அரங்கம் அமைப்பதற்கு 4 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு கேட்டுள்ளது. Source link

1 47 48 49 50 51 62