”பொண்ணு, மாப்பிள்ளையோட வந்து சண்டை போடுவாங்க…” காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 111 – If you have problems with sex, see a sexologist..!

Share

தாம்பத்திய உறவு சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும், அதற்கான நிபுணரை (செக்ஸாலஜிஸ்ட்) சந்திப்பதற்கு இன்னமும் நம்முடைய சமூகத்தில் தயக்கம் இருக்கிறது. அது கூடவே கூடாது என்கிற செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், இது தொடர்பான தன்னுடைய கருத்தையும், கேஸ் ஹிஸ்டரி ஒன்றையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“புதிதாக திருமணமானவங்க தாம்பத்திய உறவுல ஏதாவது பிரச்னைன்னா 6 மாதம் வரைக்கும்கூட உறவே இல்லாம இருந்துட்டு, அப்புறமா ஓடி வருவாங்க. அதுக்குள்ள பிரச்னை பெருசாகி அவங்களுக்குள்ள சண்டை வந்திருக்கும். பொண்ணு அம்மா வீட்டுக்குப் போய், சொந்தக்காரங்க எல்லாருக்கும் பொண்ணும் மாப்பிள்ளையும் இன்னும் ஒண்ணு சேரலைங்கிறது தெரிஞ்சு ரொம்ப சங்கடமாகிடும். எங்க ஹாஸ்பிட்டலுக்கு சம்பந்தப்பட்ட ஆணை அனுப்பி “அவருக்கு ஆண்மையில குறைபாடு இருக்கான்னு பார்த்துச் சொல்லுங்க டாக்டர்’னு கேட்பாங்க. சில நேரம் ரெண்டு பக்கம் ஃபேமிலி மெம்பர்ஸுக்கும் தெரிஞ்சு, டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கு.

எங்க ஹாஸ்பிட்டல் பக்கத்துல இருக்கிறவங்க… தினம் தினம் அவங்க கண்ல படுற இடத்துல எங்க ஹாஸ்பிட்டல் இருந்தாலும் தாம்பத்திய உறவுல பிரச்னைன்னா என்னை வந்து மீட் பண்ண மாட்டாங்க. ‘உங்க ஹாஸ்பிட்டல் வாசல் வரைக்கும் வந்துட்டுப் போயிடுவேன் டாக்டர்’னு சொன்னவங்க நிறைய பேர். இவங்க எல்லாம் கல்யாணமாகியும் வருஷக்கணக்குல தாம்பத்திய உறவு வெச்சுக்காதவங்களா இருப்பாங்க. கடைசியில ரொம்ப சின்ன பிரச்னையா இருக்கும். கல்யாணமான புதுசுல வந்திருந்தா சில வாரங்கள்ல சரி செஞ்சிருக்க முடியும். செக்ஸாலஜிஸ்ட்டை பார்க்கிறதுக்கு தயங்கித் தயங்கி வாழ்க்கையையே தொலைச்சவங்களும் இருக்காங்க.

உடனடியா சரி செஞ்சே ஆகணும்கிற பிரச்னையை வெச்சுக்கிட்டு அதுக்கான மருத்துவரைப் பார்க்காம இருக்கிறது… செக்ஸ் தொடர்பான பிரச்னையை மானத்தோட தொடர்புபடுத்துறது… ரெண்டுமே தவறு” என்கிற டாக்டர் காமராஜ், கேஸ் ஹிஸ்டரியை பகிர ஆரம்பித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com