புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர், தொண்டைமான் நல்லூர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஆகவே, இந்த பகுதி பொதுமக்கள் மின்தடை செய்யப்படும் நேரங்களில், மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு தொல்லை கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Must Read :ஜோத்பூர் பேலஸ் போன்ற கலைநயம், கண்களை கவரும் சுவரோவியங்கள்… இது நம்ம போடிநாயக்கனூர் அரண்மனை!
அதன்படி, குளத்தூர் துணை மின் நிலைய பகுதியில் இருந்து மின்சாரம் வினியோகிக்கப்படும் கீரனூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.ஜி.ஓ. காலனி, முஸ்லிம் தெரு, ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதேபோல் தொண்டைமான் நல்லூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் தொண்டைமான் நல்லூர், உடவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், தென்னதிரையன்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.