5 நாட்கள் விடுமுறையை ஜாலியாக கழித்துக்கொண்டு இருப்பீர்கள். லீவு வரும்போது தான் நண்பர்கள் , உறவினர்கள் வீட்டுக்கு போக எல்லாம் நேரம் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் இப்படியான நேரத்தில் தான் சேர்ந்து நேரம் செலவழிக்க வாய்ப்பும் அமையும். அப்படி திடீர் என்று வீட்டிற்கு விருந்தாளி வந்துவிட்டால் அவர்களுக்கு என்ன கொடுப்பது என்ற சந்தேகம் வந்துவிடும்.
அவர்கள் வந்து பேசும் நேரத்திற்கும் ஒரு காபி அல்லது தேநீர் கொடுத்துவிட்டு எதாவது ஸ்னாக்ஸ் கொடுக்கப்பது பல வீடுகளில் இருக்கும் பழக்கள். வீட்டில் எல்லா நேரங்களிலும் ஸ்னாக்ஸ் இருக்காது. அப்படியான நேரத்தில் விருந்திற்=நர் வந்து பேசும் இடைவெளிக்குள், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெஸிபியைத் தான் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
நம் வீட்டில் பருப்பு வகைகள் எப்போதும் இருக்கும். அப்படி இருக்கும் பாசி பருப்பை வைத்து அரைமணி நேரத்திற்குள் ரெடி பண்ணி கொடுக்கட்டக்கூடிய சுவையான நக்கெட்ஸ் பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். விருந்தினர் வந்ததும் ஊரபோட்டால் பேசுவதற்கு இடையிலேயே செய்து கொடுத்துவிடலாம். குழந்தைகளுக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும்.
மூங் தால் நக்கெட்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்:
- 1/2 கப் பாசி பருப்பு
- 1/2 கப் பச்சைபயறு
- உப்பு சுவைக்க
- 1/2 வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1/4 கப் கேரட், பொடியாக நறுக்கியது
- 6-7 கறிவேப்பிலை
- 1 கப் பிரெட் துண்டுகள்
- 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
- 1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு
- 1/2 தேக்கரண்டி சாட் மசாலா
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
பாசிப்பருப்பு நக்கெட்ஸ் செய்முறை :
இரண்டு பருப்புகளையும் ஒன்றாகக் கலந்து, கழுவி, 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். அவசரம் என்றால் வெந்நீரை கொதிக்கும் நிலையில் வைத்து அதனுள் இந்த பருப்புகளை போட்டு ஹாட் பாக்சில் இறுக்கமாக மூடி வைத்துவிடுங்கள். அப்போது சீக்கிரம் ஊறிவிடும். ஊறிய பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, பாதி வேகும் வரை சமைக்கவும்.

பருப்பை ஆறவைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் தனியாக எடுத்து வைத்துவிடவும். மீதமுள்ள பருப்பை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்து, இப்போது அதில் பொடியாக நறுக்கிய காய்கறிகள், மசாலா, பிரட் துண்டுகள் மற்றும் கார்ன்ஃப்ளார் சேர்த்து மாவை தயார் செய்யவும்.
இதையும் பாருங்க : 5 நாள் லீவில் குழந்தைகளுக்கு என்ன செய்துகொடுப்பது என்று யோசிக்கிறீங்களா..? இதோ உங்களுக்காக சூப்பர் ரெசிபி
தயாரிக்கப்பட்ட கலவையிலிருந்து சிறிய நகட்களை உருவாக்கவும், அதே நேரத்தில் ஒரு கடாயில் என்னை சூடாக்கி ஒவ்வொரு நக்கெட்டாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுத்தால் பாசிப்பருப்பு நக்கெட்ஸ் தயார். இது பருப்பு சாப்பிடாத குழந்தைகளை பருப்பு சாப்பிட வைக்கவும் சிறந்த வழியாக இருக்கும்.
அதே போல சீஸ் துருவி அதை இந்த கலவையின் உள்ளே ஸ்டப் செய்து பொரித்து சூடாக சாப்பிடும்போது உள்ளே சீஸ் சுவையுடன் இன்னும் சுவையாக இருக்கும். இது குழந்தைகளை ஈர்த்து இன்னும் கொஞ்சம் என்று கேட்டு சாப்பிட வைக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.