தென்னை மரமும் தேங்காய் திரட்டுப்பாலும்! | விருந்தோம்பல் | My Vikatan | My Vikatan article about coconut sweet and old memories

Share

செய்முறை

1. தேங்காயை உடைத்து, பூவாக துருவிக் கொள்ளவும்.

2. வாணலியில் பாசிப்பருப்பை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

3. தேங்காய்த்துருவலோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4. கனமான கடாயில் தட்டிய வெல்லம், காய்ச்சிய பசும் பால், அரைத்த தேங்காய் பாசிப்பருப்பபு விழுதை சேர்க்கவும்.

5. மிதமான தீயில் வைத்து தேங்காய் விழுதை வேகவிடவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

6. திரட்டுப்பால் நிறம் மாறி கெட்டியாகும் போது நெய் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். நெய் மிதக்கும் வரை கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

7. கடாயின் ஓரங்களில் நெய் பிரியும் போது அடுப்பை அணைத்து விடவும். கடாயின் சூட்டிலேயே மேலும் அரைமணி நேரம் வைத்து பின் நெய் தடவிய டப்பாவிற்கு மாற்றவும்.

தேங்காய் திரட்டுப்பால்

தேங்காய் திரட்டுப்பால்

உங்கள் கவனத்துக்கு…

இந்த இனிப்பிற்கு பசும்பால் மற்றும் பாகு வெல்லம் வைத்து செய்யும்போது தித்திக்கும் சுவையும் டார்க் பிரவுன் நிறமும் கிடைக்கும்.

வறுத்து பொடித்த பாசிப்பருப்பு மாவை தேங்காய்த்துருவலோடு சேர்த்து அரைக்கலாம். மேலே குறிப்பிட்டுள்ள தேங்காய் அளவிற்கு மூன்று டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு மாவு அளவு சரியாக இருக்கும்.

இந்த இனிப்பிற்கு கொழுப்பு சத்து அதிகமாக உள்ள கீரிம் பால் வைத்து செய்ய வேண்டாம்.

நன்கு விளைந்த தேங்காய் வைத்து செய்யும் போது ருசியாக இருக்கும். உலர்ந்த தேங்காய்த்துருவல் அல்லது frozen தேங்காய்த்துருவல் வைத்து செய்யக்கூடாது.

இந்த தீப ஒளி திருநாளுக்கு இந்த பாரம்பரிய இனிப்பான தேங்காய் திரட்டுப்பாலை செய்து பாருங்கள்.

My Vikatan பகுதியில் இதுவரை வெளியான விருந்தோம்பல் சிறப்பு ரெசிப்பி வீடியோக்களை இங்கே https://bit.ly/3Op3QQ2 காணலாம். மேலும் ஓர் அறுசுவை அனுபவ விருந்தோடு விரைவில் சந்திப்போம்!

நன்றி

முத்துலெட்சுமி மாதவக்கிருஷ்ணன்

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com