மியாமி டெக் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின் 4,50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாக கிடைத்துள்ளது.
அதன்பின்னர் Delv.AI நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் கொண்ட குழுவினர் வேலை செய்கின்றனர். 2022-ல் 3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்.
பெற்றோராகப் பலருக்கும் தங்களின் குழந்தைகள் நன்றாக படித்து கல்லூரி சென்று, கைநிறைய பணம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு என்ன விருப்பம் இருக்கிறது என்பதை அறிவதில் கோட்டை விட்டு விடுகிறார்கள்.
ஆனால் இந்தச் சிறுமியின் விஷயத்தில் அவரின் தந்தை மிகவும் பக்க பலமாக இருந்திருக்கிறார். சிறுமியின் விருப்பத்திற்கேற்ப அவருக்கு கல்வி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி கல்லூரி படிப்பை முடிக்கவில்லை என்றாலும் அது சிறிது காலத்திற்கே தள்ளிப் போடப்பட்டிருக்கிறது. நிறுவனத்தை நிர்வகிக்க பிற்காலத்தில் தேவையான உயர்கல்வியையும் அவர் பெறலாம். இந்த முடிவையும் சிறுமியே எடுத்திருக்கிறார்.
உங்கள் குழந்தைகளின் எல்லா முடிவையும் நீங்களே எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்.
மாத்தி யோசிங்க…