வேலூரில் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும்…
வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும்.
கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்படும்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற அந்தோணி, ஜேசுராஜா, ரூபன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக மீன் பிடி படகு நெடுந்தீவு கடற்பகுதியில் தரை தட்டி நின்றது.
இதனையடுத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.
வெளிநாடு புறப்பட்டோர் மோடி
ஆறு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் எகிப்து நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து இரு நாட்டு உறவு குறித்து பேசவுள்ளார்.
கடைமடை மாவட்டத்தை வந்தடைந்த காவிரி நீர்
மேட்டூரில் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீரானது கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்ட எல்லை திருவாலங்காடு விக்ரமன் ஆற்று தலைப்பை நள்ளிரவு வந்தடைந்தது. அங்கிருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 782 கன அடி நீரை பாசனத்திற்காக அதிகாலை 3 மணி அளவில் நீரை திறந்து விட்டனர்.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை….
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை…
திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது கனமழையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் தபாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்கள்.
பள்ளிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
இன்று பரவலாக மழை குறைந்து காணப்படுவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விடுமுறை இல்லை
சென்னையில் இன்று காலை மழை குறைந்ததால், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.