கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் பள்ளிக்கு நடந்து சென்ற 13 வயது சிறுமி டிசம்பர் 20 புதன்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கர்நாடகா முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தில் வசிக்கும் 13 வயது ஸ்ருஸ்தி என்ற சிறுமி, தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.
பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கிச் சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே சிறுமியை முடிகெரே நகரில் உள்ள அரசு எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்ததாகக் கூறியுள்ளனர்.
உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, விளையாடிக் கொண்டிருக்கும்போது, முதலிரவின் போது இளம் வயதினரிடையே மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவங்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இப்பொழுது சாதாரணமாகப் பள்ளிக்கு நடந்துசென்று கொண்டிருந்த சிறுமி, திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் இறந்ததுள்ளார். இந்த சம்வம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடல்நலனில் கவனம் கொள்ளுங்கள்!