கொண்டக்கடலை வைத்து ஒரு முறை இந்த ரெசிபி செய்யுங்க… சுவை அள்ளும்!

Share

சுண்டல், மூக்குக்கடலை, கொண்ட கடலை என பல்வேறு விதங்களில் அழைக்கப்படும் சென்னா சாட் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களில் ஒன்று. இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.

இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கொண்டக்கடலையை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டக்கடலை கோஃப்தா கறி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது, வெள்ளை சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என அனைத்திற்கு அட்டகாசமான காம்பினேஷன். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடும் கொண்டக்கடலை கோஃப்தா கறி செய்முறை இங்கே…..

தேவையான பொருட்கள் :

கோஃப்தா செய்வதற்கு….

கொண்டைக்கடலை – 1 கப் ( 250 மி.லி ).

பச்சை மிளகாய் – 1 நறுக்கியது.

இஞ்சி – 1 துண்டு நறுக்கியது.

பூண்டு – 2 பற்கள் நறுக்கியது.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

சோம்பு – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.

தனியா தூள் – 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் – 1 ஸ்பூன்.

கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்.

உப்பு – 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி இலை – சிறிது.

எண்ணெய் – தேவையான அளவு.

மசாலா கிரேவி செய்வதற்கு…

உப்பில்லாத வெண்ணெய் – 2 ஸ்பூன்.

எண்ணெய் – 1 ஸ்பூன்.

பட்டை – 1 துண்டு (சிறியது).

கிராம்பு – 4.

ஏலக்காய் – 2.

மிளகு – 1/4 ஸ்பூன்.

சீரகம் – ¼ ஸ்பூன்.

வெங்காயம் – 2 (நறுக்கியது).

பச்சை மிளகாய் – 2 (கீறியது).

இஞ்சி – 1 துண்டு (நறுக்கியது).

பூண்டு – 5 பல்.

தக்காளி – 4 பொடியாக நறுக்கியது.

முந்திரி பருப்பு – 4.

உப்பு – 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்.

தனியா தூள் – 1 ஸ்பூன்.

சீரக தூள் – 1 ஸ்பூன்.

சர்க்கரை – 1 ஸ்பூன்.

கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்.

கசூரி மேத்தி – சிறிது.

பிரெஷ் கிரீம் – கால் கப்.

கொத்தமல்லி இலை – சிறிது.

செய்முறை :

> முதலில் ஒரு பாத்திரத்தில் கொண்டக்கடலையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

> பின்பு, ஊறவைத்த கொண்டக்கடலை, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.

> இதையடுத்து, அரைத்து வைத்த கொண்டைக்கடலை சேர்மத்தை, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

> இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் உருட்டிய கோஃப்தா உருண்டையை போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

> கிரேவி செய்ய, ஒரு கடாயை அடுப்பில் வைத்து உப்பில்லாத வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து, வெண்ணை உருகியதும் அதில் – பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

Also Read | முட்டையை வெறுமனே வேக வைத்து சாப்பிட போர் அடிக்குதா..? அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க!!

> பிறகு, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

> இதையடுத்து, தக்காளி, முந்திரி பருப்பு இவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும். பின்னர், உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும்.

> பச்சை வாசனை மாறியதும், அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

> தக்காளி நன்கு மசிந்ததும் கலவையை நன்கு ஆறவிடவும். ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.

> இப்போது, ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய், அரைத்த மசாலா விழுது, தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.

> பின்னர், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும். கிரேவியை மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

> கஸ்த்தூரி மேத்தியை சேர்த்து கலந்து விட கிரேவி தயார்.

> ஒரு பாத்திரத்தில் கிரேவியை ஊற்றி கோஃப்தா உருண்டையை வைத்து அதன் மேலே பிரெஷ் கிரீம் மற்றும் கொத்தமல்லி இலையை தூவி பரிமாறலாம்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com