லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தில் அமீர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் எனப் பெரும் நடிகர் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி (நாளை) திரையறங்குகளில் வெளியாகிறது. அதே நேரம் இந்த ஆண்டுடன் நடிகர் ரஜினிகாந்த் திரைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவரின் திரைப்பயணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அதன் அடிப்படையில் இசையமைப்பாளர் அனிருத் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்த பேட்ட 2019, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடித்த தர்பார் 2020, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்த ஜெயிலர் 2023, ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் 2024, நாளை வெளியாகவிருக்கும் கூலி படத்துக்கு என தொடர்ந்து நடிகர் ரஜினியின் படத்துக்கு அனிருத் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால சினிமா பயணத்திற்கும், நாளை வெளியாகவுள்ள கூலி படத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.