நாளை (டிசம்பர் 17-ம் தேதி) ஈரோட்டில் இயற்கை உணவு திருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவைத் தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு, VET கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்ந்து நடத்த உள்ளனர். இந்த உணவு திருவிழாவானது VET கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த உணவு திருவிழாவிற்கு “மண் மனம்’ என்று பெயரிட்டிருக்கின்றனர்.
மண் மனம் இயற்கை உணவு திருவிழாவில் விழாவில் பல்வேறு உணவுகள், பயிற்சிப் பட்டறைகள், பொருட்கள் ஆடைகள், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டுகள் என ஒரு குடும்பத்திற்கு கற்பதற்கான பொழுதுபோக்காக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.
இந்த உணவுத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும் உணவுப் பொருள்களான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், செக்கு எண்ணெய், மளிகை பொருட்கள், சமைத்த உணவு, ஆரோக்கியமான நொறுவல்கள்/ தின்பண்டங்கள், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள், தேன் என்று காட்சிப்படுத்தும் உணவுகளின் பட்டியல். மேலும் இயற்கை சாயம் பூசப்பட்ட கைத்தறி ஆடைகள், ரசாயனம் இல்லாத தினசரி பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் அங்கே படுத்தப்பட இருக்கிறது.