சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் தமாகா தலைவர் வாசனிடம் தொலைபேசியில் கலந்து பேசி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சித் தலைமை என்னை தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்காக பணியை ஒப்படைத்துள்ளது அந்த பணியை நான் செய்து கொண்டு இருக்கிறேன். விரைவில் தமிழ்நாடு முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக பாதயாத்திரை நடத்த இருக்கிறேன் அது ஓர் ஆண்டு ஆகும். எனவே எனக்கு கட்சியின் வளர்ச்சி தான் முக்கியம்.ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் பாஜ போட்டியிடுமா இல்லையா என்பதை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும். விமானத்தில் கதவு திறந்த சம்பவம் மிகைப்படுத்தப்பட்டது. மாண்டஸ் புயலுக்கு அடுத்த நாள் காலையில் திருச்சிக்கு செல்ல வேண்டிய விமானம் ரத்தானது. இதனால் 10 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் 11 மணிக்கு புறப்பட்டது. அதில் நானும், கர்நாடகா மாநில எம்பியும் இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவும் சென்றோம். எம்ஜென்சி கதவு அருகே 4 பேர் உட்கார்ந்திருந்தோம். அப்போது விமானம் புறப்படும்போது, ஏசியை தேஜஸ்வி சூர்யா சரிசெய்தார். அப்போது தெரியாமல் எமர்ஜென்சி கதவு பட்டனில் கை பட்டு விட்டது. இதன் பின்னர் விமானம் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது. இன்ஜினியர்கள் எங்களிடம் விசாரித்தனர். நாங்கள் நடந்ததை கூறினோம்.
ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு: அண்ணாமலை தகவல்
Share
