” இந்த வெற்றியை எங்கள் சொந்த மண்ணில் மீண்டும் கொடுப்போம் என்று நம்புகிறேன்”- ஹென்றி கிளாசென்|’This is a great victory for us. I hope we can return this success again on our home soil’Heinrich Klaasen.

Share

ஐபிஎல் தொடரின் நேற்றைய(ஏப்ரல் 29) ஆட்டத்தில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதின.

இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத், மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹென்றி கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

விருது வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கடந்த ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் இப்போது கார்னர் திசையில் என்னால் பலமாக அடிக்க முடிவதில்லை.

ஹென்றி கிளாசென்

ஹென்றி கிளாசென்

இருப்பினும் இதற்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். அணிக்கு எனது பங்களிப்பை அளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இது எங்களுக்கு ஒரு சிறந்த வெற்றி, இந்த வெற்றியை எங்கள் சொந்த மண்ணில் மீண்டும் கொடுப்போம் என்று நம்புகிறேன். தொடக்க ஆட்டக்காரர்கள் ஓவருக்கு 15, 16 ரன்கள் எடுத்தால், அது எங்களின் வேலையை எளிதாக்கும்.

நான் களமிறங்கியபோது, 250 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடுகையில் ரன் ரேட் 10-க்கும் குறைவாகவே இருந்தது. அது தொடக்க ஆட்டக்காரர்கள் செய்த அற்புதமான வேலை” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com