“இங்கேதான் என் வாழ்க்கை தொடங்கியது!”- வான்கடே ஸ்டேடியத்தில் தன் சிலை அமைவது குறித்து சச்சின் | Sachin Tendulkar’s Life-Size Statue To Be Unveiled At Wankhede Stadium

Share

இதையடுத்து இன்று தன் மனைவியுடன் வான்கடே மைதானத்தில் சிலை அமைப்பது பற்றிப் பார்வையிட்ட சச்சின், தனக்கு அமைக்கவிருக்கிற சிலை பற்றிப் பேசுகையில், “இது எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது. இதே வான்கடே மைதானத்தில்தான் என் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினேன். என் முதல் ரஞ்சிப் போட்டியை இங்குதான் விளையாடினேன். நீண்ட காலத்திற்கு முன்பு, என் பயிற்சியாளரான அச்ரேக்கர் சார் என்னை இங்கே திட்டினார், அது என்னைத் தீவிர கிரிக்கெட் வீரனாக மாற்றியது.

இங்கேயேதான் என் கடைசி போட்டியையும் விளையாடினேன். என் வாழ்க்கை ஒரு வட்டத்தைப்போல இங்கே தொடங்கி இங்கேயே நிறைவடைந்தது என்று கூறலாம். இங்கு எனக்கு நிறைய அற்புதமான நினைவுகள் இருக்கின்றன. இங்கு நடந்த மறக்கமுடியாத மிகப்பெரிய நல்ல தருணங்கள் என் வாழ்வில் நீங்கா நினைவுகளாக இருப்பவை” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com