அமெரிக்க கடற்படை முற்றுகைக்குப் பதிலடியாக இரான் விடுத்த புதிய எச்சரிக்கை என்ன?

Share

'வளைகுடா, செங்கடலில் கப்பல்கள் தடுக்கப்படும்' என இரான் புதிய எச்சரிக்கை -  என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோர்மூஸ் நீரிணையை கடந்த சென்ற ஒரு கப்பல்

அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் ஓமன் கடலில் கப்பல் போக்குவரத்து தடுக்கப்படும் என இரான் ராணுவம் அச்சுறுத்தியுள்ளது.

அமெரிக்கா தனது முற்றுகையைத் தொடர்ந்து,”இரானின் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டாங்கர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை” உருவாக்கினால், அது “போர் நிறுத்தத்தை மீறுவதற்கான ஒரு முன்னோடியாக” அமையும் என்று இரானில் ஆயுதப் படைகளை ஒருங்கிணைக்கும் நாட்டின் மிக உயர்ந்த செயல்பாட்டுக் கட்டளையகமான காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் தளபதி அலி அப்துல்லாஹி கூறியுள்ளார்.

இதன் விளைவாக, இரானின் ஆயுதப் படைகள் “பாரசீக வளைகுடா, ஓமன் கடல் மற்றும் செங்கடலில் எந்தவொரு ஏற்றுமதி அல்லது இறக்குமதியையும் தொடர அனுமதிக்காது” என்று அப்துல்லாஹி மேலும் கூறினார்.

அவர் குறிப்பிட்ட நீர்நிலைகள் ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், எந்தெந்த நாடுகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் பாதிக்கப்படக்கூடும் என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

இரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை திங்களன்று தொடங்கியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com