இரண்டும் புரதத்தின் சிறந்த ஆதாரங்கள் என்பதால், இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். தயிர் மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடுவது ஆயுர்வேதத்தின் படி தவறான பொருத்தமாக கருதப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவர் சுஜிதா முத்ரேஜா கூறுகையில், ஆயுர்வேதத்தில் தயிர் மற்றும் மீனை ஒன்றாக சாப்பிடும் முறையை தவறான உணவுப்பழக்கம் என்று அழைக்கிறார்கள். எனவே, இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் பல தீமைகள் ஏற்படுகின்றன. அவை என்னென்ன பார்க்கலாம்.
அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தலாம்
தயிர் மற்றும் மீனில் நிறைய புரதம் உள்ளது. ஆனால் இரண்டு புரதங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்று டாக்டர் சுஜிதா முத்ரேஜா கூறுகிறார். இரண்டிலும் வெவ்வேறு வகையான புரதங்கள் உள்ளன. எனவே, தயிர் மற்றும் மீனை ஒன்றாகச் சாப்பிடுவதால், செரிமானத்தில் சிக்கல் ஏற்படுகிறது. இது வாயு மற்றும் அமிலத்தன்மைக்கு வழிவகுக்கும். முறையற்ற செரிமானம் காரணமாக, அக்னிபந்தா ஏற்படலாம், இதன் காரணமாக தோல் மீது தடிப்புகள், தோல் ஒவ்வாமை வரலாம்.

தயிர் மற்றும் மீனை ஒன்றாகச் சாப்பிடுவது பெரும்பாலும் பிரச்சனையை உண்டாக்கும். குறிப்பாக அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனையை உண்டாக்கும். ஆனால் இதுவே உங்கள் செரிமான அமைப்பு சரியாக இருந்தால் செரிமானத்தை எளிதாக்கலாம் என்று டாக்டர் சுஜிதா கூறுகிறார். தயிரையும் மீனையும் ஒன்றாகச் சாப்பிட்டாலும் பெரும்பாலானோருக்கு எந்தப் பிரச்னையும் வராமல் இருப்பதற்கு இதுவே காரணம். அதே சமயம் நல்ல உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் பிரச்சனைகள் இருக்காது என்று கூறுகிறார்.
கண்கள் மற்றும் கருவுறுதல் மீது விளைவு
செரிமான அமைப்பு சரியாக இல்லாதவர்களை ஆயுர்வேதத்தில் அக்னி என்று அழைக்கிறார்கள் என்று டாக்டர் சுஜிதா கூறினார். அப்படிப்பட்டவர்கள் மீன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிட்டால் உடனடி பிரச்சனைகள் வரலாம். உண்மையில், தயிர் சைவ புரதத்தின் மூலமாகும், மற்றொன்று விலங்கு புரதத்தின் மூலமாகும். மறுபுறம், தயிர் பிட்டாஜா மற்றும் மீன் தண்ணீரில் வாழும் ஒரு உயிரினம். தயிர் புளிக்கப்படுகிறது. எனவே ஆயுர்வேதத்தில் இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தில், இது இரண்டாவது விஷமாக கருதப்படுகிறது. ஒருவர் தயிர் மற்றும் மீனை நீண்ட நேரம் உட்கொண்டால், அதில் தோல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும், பிறகும் கண்களில் பிரச்சனைகள் வரலாம் என்று டாக்டர் சுஜிதா கூறினார். அதுமட்டுமின்றி, கருவுறுதலில் எதிர்மறையான விளைவையும் ஏற்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.