Virat Kohli : `12 ஆண்டுகளுக்குப் பிறகு’ ரஞ்சி டிராபியில் விராட் கோலி? – பின்னணி என்ன| Is Virat Kohli making comeback to Ranji Trophy

Share

டெல்லி அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் பெயர் இடம்பெற்றிருப்பதை பிசிசிஐயின் நிர்பந்தத்தோடு ஒப்பிட்டும் பார்க்க முடியாது. விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் அவர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே ரஞ்சிக்கான அணியில் தங்களையும் இணைத்திருக்க முடியும். ஏனெனில், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு முன்பாக கோலி கடைசியாக ஜனவரி மாதத்தில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடியிருந்தார்.

8 மாதங்களாக சிவப்பு நிற பந்தில் அவர் கிரிக்கெட்டே ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான முதல் போட்டியில் ஒயிட் பால் ஹேங் ஓவரால் கோலி திணறியதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இந்த வங்கதேச தொடருக்கு முன்பாக துலிப் டிராபி நடந்திருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பவிருந்த ரிஷப் பண்ட் துலிப் டிராபியில் ஆடிவிட்டுதான் வங்கதேச தொடருக்கு வந்தார். அந்த பயிற்சியின் பலனை அவர் அனுபவித்தார். சேப்பாக்கத்தில் மிகச்சிறப்பாக சதமடித்தார். இதன் பின்னணியில்தான் கோலியுமே கூட ரஞ்சி டிராபிக்கான அணியில் தன் பெயரை இடம்பெற செய்திருக்க முடியும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com