NCRB Report: பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதலில் பெங்களூரு முதலிடம்… | NCRB data: Bengaluru tops in acid attacks against women in 2022

Share

ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் போன்ற பெருநகரங்களில் 2022-ல் ஆசிட் தாக்குதலுக்கு முயற்சி செய்த இரண்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

பெங்களுருவில் 2022 ஏப்ரல் 28 அன்று 24 வயதான எம்.காம் பட்டதாரி பெண் வேலைக்குச் சென்ற போது அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் அந்தப் பெண்ணை பல ஆண்டுகளாக பின்தொடர்ந்து வந்த நபர், திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பெண் மறுக்கவே அவர் மீது ஆசிட் அடித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களுருவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

மே மாதம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் சுவாமி வேடத்தில் பதுங்கியிருந்த அவர் பிடிபட்டார். ஜூன் 2023-ல், பாதிக்கப்பட்டவருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் செயலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

இதேபோன்ற மற்றொரு வழக்கு ஜூன் 10, 2022 அன்று பதிவு செய்யப்பட்டது. அதில் ஓர் ஆண் தன் தோழி திருமணம் செய்து கொள்ள நிராகரித்ததால் அவர் முகத்தில் ஆசிட் வீசி இருக்கிறார்.

காதல் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அப்பெண்ணின் அழகைக் குலைக்க வேண்டும் என்று ஆசிட் தாக்குதலை நடத்துகின்றனர். தன்னை நிராகரித்த பெண்ணை அனைவரும் நிராகரிக்க வேண்டும், வெறுக்க வேண்டும் என்று செய்யும் கீழ்த்தரமான செயல் அவமானத்திற்குரியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com