LSG Vs KKR : பேட்டிங், ஃபீல்டிங் என இரண்டிலும் கலக்கிய ரிங்கு சிங் – சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தியது கேகேஆர்

Share

பேட்டிங், ஃபீல்டிங் என ரிங்கு சிங் கலக்க, சூப்பர் ஓவரில் லக்னோவை வீழ்த்தியது கேகேஆர்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 தொடரின் 38வது போட்டியில் இன்று (ஏப்ரல் 26) லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதன் மூலம் லக்னௌ அணி தொடர்ச்சியாக ஐந்தாவது போட்டியில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அந்த அணியில் எம்.சித்தார்த்துக்குப் பதிலாக ஜார்ஜ் லிண்டா சேர்க்கப்பட்டார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிங்கு சிங் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் எடுத்தார். லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் பந்துவீச்சாளர் மோசின் கான் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. அதனால் ஆட்டம் ‘டை’ ஆனது. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், 16 ரன்கள் எடுத்து ஆட்டத்தை சமனாக்கியது எல்எஸ்ஜி அணி.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி, 1 ரன் மட்டுமே எடுத்தது. மூன்றே பந்துகளில் அந்த அணியின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் சுனில் நரைன். அதன்பிறகு முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்தார் ரிங்கு சிங்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com