Doctor Vikatan: பிசிஓடியால் உடலில் அதிகரிக்கும் ரோம வளர்ச்சி, என்ன தான் தீர்வு?!|PCOD problem increases bodily hair growth, what is the solution?!

Share

ஆனால் பிசிஓடி பாதிப்புள்ள பெண்களின் உடலில் இந்த டெஸ்டோஸ்டீரான்  ஹார்மோன் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் உடலில் ஆண்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படும். உதாரணத்துக்கு நிறைய பருக்கள், தலையில் வழுக்கை, உடலெங்கும் ரோம வளர்ச்சி, கழுத்துப் பகுதியில் கருமை, வயிறு, இடுப்புப் பகுதிகளில் சதை போடுவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

எனவே உங்கள் தோழியின் விஷயத்தில் நீங்கள் அறிவுறுத்த வேண்டிய முதல் விஷயம் எடைக்குறைப்பு. அவரது பி.எம்.ஐ கணக்கீட்டின்படி, அதிலிருந்தது 5 சதவிகிதமாவது உடல் எடையைக் குறைத்தால் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறையும்.

கூடவே எல்.ஹெச் என்ற ஹார்மோனும் குறைந்து, அவரது உடலில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். உங்கள் தோழியை மகளிர்நல மருத்துவரை நேரில் சந்தித்து, இது குறித்து ஆலோசனைகள் பெற்றுப் பின்பற்றச் சொல்லுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com