CSK vs LSG: உர்வில் படேல் அசத்தல்: சிஎஸ்கே பிளேஆஃப் வாய்ப்பு என்ன?

Share

CSK vs LSG, உர்வில் படேல், ஐபிஎல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எல்எஸ்ஜி அணிக்கெதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்தார் உர்வில் பட்டேல்

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு எதிராக நேற்று (மே 10) நடந்த ஐபிஎல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த வெற்றி அந்த அணியை புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது. 11 போட்டிகளில் 6 வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. முதல் 8 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்த அந்த அணி தற்போது ஹாட்ரிக் வெற்றிகள் பெற்றிருக்கிறது.

இந்த வெற்றியின் இன்னொரு சிறப்பம்சம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் 180+ இலக்கை வெற்றிகரமாக எட்டியிருக்கிறது.

இந்த சிறப்புமிக்க வெற்றிக்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் உர்வில் பட்டேல். 23 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர், 282.6 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 65 ரன்கள் விளாசினார். 13 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலின் சாதனையை அவர் சமன் செய்தார்.

கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியின் பவர்பிளேவில் அவர் ஆடிய குறிப்பிட்ட 8 பந்துகள் சூப்பர் கிங்ஸின் இந்த வெற்றியை சாத்தியப்படுத்தியது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com