Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. ‘கூலி’ படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் 2ரஜினியின் திரைப்பயணத்தில் வசூலில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் ‘ஜெயிலர்’. ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருந்த ரஜினி, அனிருத்தின் மிரட்டலான இசை, நெல்சனின் கமர்சியல் மீட்டர் என உருவான இப்படம் 650 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்…









