“நடப்பு சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை” – ராயுடு கருத்து | i dont see csk making comeback in ipl 2025 season says rayudu

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே கம்பேக் கொடுக்க வாய்ப்பில்லை என அந்த அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மோசமான செயல்பாடு அந்த அணி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை கடும் அதிருப்தியடைய செய்துள்ளது. முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அண்மையில் முன்னாள்…

Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள் தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. கடந்த வருடம் ஆஞ்சியோ செய்ததில் இதயத்தின் ரத்தக்குழாயில் 50 சதவிகித அடைப்பு இருப்பதாகவும் மாத்திரைகள் மூலமே சமாளிக்கலாம் என்றும் மருத்துவர் சொன்னார். இந்த அடைப்பு எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மீண்டும் ஆஞ்சியோதான் செய்ய வேண்டுமா? இசிஜி, எக்கோ பரிசோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமா… இசிஜி, எக்கோ பரிசோதனைகள் நார்மல் என்றால் என் இதயம் ஆரோக்கியமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்நீங்கள் கேட்டுள்ளபடி, எக்கோ அல்லது இசிஜி பரிசோதனைகளில், உங்களுக்கு ஏற்கெனவே இருந்த…

சுட்டெரிக்கும் கோடையிலும் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் 10 வழிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, கான்கிரீட்டால் கட்டப்பட்ட வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அதுவும் நகரத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியில் வசித்தால், வீடு அதிக சூடாகிவிடும்.கட்டுரை தகவல்வெப்பம் மிகுந்த கோடை மாதங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் வீட்டுக்கு உள்ளேயும் வெப்பம் அதிகமாக உள்ளது.நீங்கள் மண்ணால் கட்டப்பட்ட ஒரு பழைய வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், வெப்பத்தை அவ்வளவாக உணர மாட்டீர்கள்.ஆனால் நீங்கள் கான்கிரீட் வீட்டில் வசிக்கிறீர்கள் என்றால், அதுவும் நகரத்தில்,…

IPL 2025: “விடுமுறையை கழிக்க வந்திருக்கிறார்கள்” – சேவாக் விமர்சித்த `வெளிநாட்டு வீரர்கள்’ யார்?

“மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனின் பசி போய்விட்டது என உணர்கிறேன். அவர்கள் இங்கே விடுமுறையைக் கழிக்க வந்துள்ளனர். அவர்கள் வருகிறார்கள், வேடிக்கைப் பார்க்கிறார்கள், கிளம்புகிறார்கள். தங்கள் அணியின் வெற்றிக்காக போராட வேண்டும் என்ற ஆசை வெளிப்படவில்லை” என்று சேவாக் பேசியுள்ளார்.”நான் நிறைய முன்னாள் வீரர்களுடன் நேரத்தைச் செலவிட்டிருக்கிறேன், ஆனால் ஒன்றிரண்டு பேர் மட்டுமே எனக்கு “ஆம், நான் உண்மையிலேயே அணிக்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்’ என்ற உணர்வைத் தந்தார்கள்” என்றும் கூறியுள்ளார்.மேக்ஸ்வெல் இந்த சீசன் முழுவதும் 41 ரன்கள்…

Aval Vikatan – 06 May 2025 – ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்? | namakkulle editorial page may 07 2025

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி. பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார்.அரசியல் மேடைதான் என்றில்லை… திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என பற்பல…

39 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத் | ஐபிஎல் 2025 | KKR vs GT, IPL 2025: Gujarat Titans beat Kolkata Knight Riders

நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 36 பந்துகளில் 52…

கத்தோலிக்க திருச்சபையை மாற்றிய லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ்

பட மூலாதாரம், AP2 மணி நேரங்களுக்கு முன்னர்போப் பிரான்சிஸ் கத்தோலிக்கத் திருச்சபையின் போப்பாக பொறுப்பேற்றது பல்வேறு புதிய நிகழ்வுகளின் தொடக்கமாக அமைந்தது.தெற்கு அரைக்கோள பகுதிகளில் இருந்து வந்த முதல் போப், இவர்தான். சிரியாவில் பிறந்த போப் மூன்றாம் கிரிகோரி 741 ஆம் ஆண்டு இறந்ததிலிருந்து, ஐரோப்பியரல்லாத ஒருவர், போப் பதவியில் இருந்ததில்லை. புனித பீட்டரின் அரியணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இயேசு சபை உறுப்பினரும் போப் பிரான்சிஸ்தான். வரலாற்று ரீதியாக , ரோமில் இயேசு சபையைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும்…

csk; ipl2025; raina; `சி.எஸ்.கே இவ்வாறு தடுமாறி நான் பார்த்ததில்லை’ ரெய்னா

சிஎஸ்கே அணி ஐ.பி.எல்லில் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு படுமோசமாக இந்த சீசனில் ஆடிவருகிறது. 8 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது.குறிப்பாக 5 போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்தது. தோனி கேப்டன் பொறுப்பேற்ற பிறகு 3 போட்டிகளில் 2-ல் சென்னை தோல்வியடைந்திருக்கிறது.இன்னும் ஆறு போட்டிகள் மிஞ்சிருக்கும் நிலையில், அவையனைத்திலும் வெற்றிபெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற கடினமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.cskhttps://x.com/ChennaiIPLமற்ற அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 7 போட்டிகள் ஆடி தங்களின் முழுமையான பிளெயிங்…

‘இந்தியாவில் ஆட மாட்டோம்’ – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு @ மகளிர் உலகக் கோப்பை | pakistan will not play Womens World Cup in India pcb decision

இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட இந்தியாவுக்கு பயணிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட, ‘ஹைபிரிட் மாடல்’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான் மகளிர் அணி தங்கள் போட்டிகளை நடுநிலை மைதானங்களிலேயே ஆடவுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்தது பிசிசிஐ. இதையடுத்து துபாயில் ஒரே மைதானத்தில்…