Corona vaccine: தமிழ்நாட்டில் 95 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை!
தமிழ்நாட்டில் 95,00,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்திக் கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.கொரோனா மூன்றாவது அலை பரவி வரும் வேளையில் மூன்றாவது டோஸ் என்ற பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இரண்டாவது டோஸ் செலுத்த உரிய நேரம் வந்தும் 95.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது.கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 79.3 லட்சம் பேரும் கோவாக்சின் செலுத்திக் கொண்ட 15.8 லட்சம்…








