கோலியை ‘காப்பி’ அடிக்கிறார் கில்; அவர் மொழியும், வசை வார்த்தைகளும் சரியில்லை- மனோஜ் திவாரி சாடல் | Manoj Tiwari slams Shubman Gill
ஷுப்மன் கில்லின் அல்ட்ரா அக்ரசிவ் அணுகுமுறை தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராலி டைம் வேஸ்ட் செய்ததற்காக அவரைக் கரகோஷம் செய்து ஒட்டுமொத்த இந்திய அணியும் கேலி செய்ததுதான் இங்கிலாந்தை உசுப்பேற்றி விட்டு டெஸ்ட்டை வெற்றிபெறச் செய்துள்ளது என்ற விமர்சனங்களுக்கு இடையே கில் விமர்சனத்தில் இணைந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி. ஸ்போர்ட்ஸ் பூம் என்ற ஊடகத்திற்குப் பேட்டி அளித்த மனோஜ் திவாரி, “ஷுப்மன் கில்…