Browsing: விளையாட்டு

அரை இறுதியில் சாட்விக், ஷிராக் ஜோடி |  சீனா ஓபன் பாட்மிண்டன் | China Open 2025: Satwik-Chirag reach semifinals

சாங்சோவ்: சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. சீனாவின் சாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் யூ சின் ஆங்க், யி தியோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-18, 21-14…

ஜோ ரூட் சதம் விளாசல்: இங்கிலாந்து அணி ரன் வேட்டை! | Joe Root hits century England hunts run in manchester test

மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்தது. ஜோ ரூட் சதம் விளாசினார். மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61,யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து விளையாடிய…

இந்திய அணியின் உயிரற்றப் பந்து வீச்சு: தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து | India’s lifeless bowling: England in pursuit of series win

ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய அணியின் ரிஷப் பந்த் கால் எலும்பு முறிவுடன் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை சிக்ஸர் அடித்தும், அரைசதம் அடித்தும் பெரிய அளவில் இந்திய அணிக்கு அளித்த ஊக்கம் பவுலர்கள் மனதில் ஏறவில்லை. எதற்காகப் பந்து வீசுகிறோம் என்று தெரியாமலேயே வீசினர். பும்ரா உட்பட அனைவரும் சொதப்பலோ சொதப்பல். கில்லின் களவியூகம் பார்க்கச் சகிக்கவில்லை. ரன் தடுப்பு களவியூகம் அமைத்து இங்கிலாந்து தொடக்க வீரர்களை செட்டில் ஆக விட்டார். ஜஸ்பிரித் பும்ராவின்…

இறுதிப் போட்டியில் மோதும் இந்தியர்கள்: வெல்லப்போவது யார்? – சூடுபிடித்த உலக செஸ் கோப்பை போட்டி!

ஜார்ஜியாவில் “ஃபிடே மகளிர் உலகக் கோப்பை’ செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனையும் சர்வதேச கிராண்ட் மாஸ்டருமான 19 வயதான திவ்யா தேஷ்முக் முன்னாள், உலக சாம்பியனும் சீன வீராங்கனையுமான டேனை எதிர்கொண்டார். முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியின் 101-வது நகர்த்தலில் திவ்யா தேஷ்முக் வெற்றி வாகை சூடி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருக்கிறார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய…

‘போர் கண்ட சிங்கம்’ ரிஷப் பந்த் – மான்செஸ்டரில் ‘விடாமுயற்சி’ இன்னிங்ஸ்! | Rishabh Pant fighting innings with fractured toe game spirit

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் போராட்ட குணமும், அவரது விடாமுயற்சியும் அனைவரும் அறிந்ததுதான். அதற்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவரது ஆட்டம். வலது குதிகால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையிலும், அணிக்காக பேட் செய்து அசத்தினார் ரிஷப் பந்த். திரைப்படங்களில் வரும் வசனங்களை ரியல் லைஃபில் பிரதிபலிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்து ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் அரை சதம்…

“நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' – மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்சினின் பாராட்டும்

மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவருகிறது (ஜுலை 23 முதல்).இதில் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று காலில் காயமடைந்தார்.அந்த பந்தில் தடுமாறி ஒரு ரன் எடுத்த பண்ட்டால் அதற்கு மேல் களத்தில் நிற்கக்கூட முடியவில்லை. உடனடியாக 37 ரன்களில் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் பெவியலியன் திரும்பினார்.ரிஷப் பண்ட்பின்னர் பரிசோதனையில் பண்ட்டின் காலில் எலும்பு…

ரிஷப் பந்த் காயத்துடன் போராடி அரை சதம் விளாசல்: இந்திய அணி 358 ரன்களுக்கு ஆட்டமிழப்பு | Rishabh Pant scores fifty despite injury India all out for 358 runs

மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் போராடிய ரிஷப் பந்த் அரை சதம் அடித்து அணிக்கு பலம் சேர்த்தார். மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 83 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, கே.எல்.ராகுல் 46,…

Pant: `காயத்துடன் களமிறங்கும் ரிஷப் பண்ட்; ஆனால் கீப்பிங் மட்டும்…" – BCCI கொடுத்த அப்டேட்

இங்கிலாந்து இந்தியா இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்றைய (ஜூலை 23) தினம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கியது. போட்டியின்போது பேட்டிங் விளையாடிய இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்டுக்கு காலில் காயம் ஏற்பட்டது. கிறிஸ் வோக்ஸ் போட்ட பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்கும் முயற்சி தோல்வியடைந்ததால் பந்து இன்சைட்-எட்ஜ் ஆகி அவரது வலது காலை தாக்கியது.அந்த பந்து மைதானத்தில் இரத்தம் வருமளவு பலத்த காயத்தை ஏற்படுத்தியது.மைதானத்தில் கொடுக்கப்பட்ட பிஸியோ சிகிச்சை பலனளிக்காததால் பண்ட் வாகனத்தில் மைதானத்திலிருந்து…

எலும்பு முறிவால் ரிஷப் பந்த் விலகல்: இங்கிலாந்து தொடரில் இந்திய அணிக்கு பின்னடைவு | Rishabh Pant out due to fracture: India’s setback in England series

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 4 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய…

உலகக்கோப்பை செஸ் தொடரில் சாதிக்கும் இந்திய இளம் வீராங்கனை – முழு விவரம்!

தலைசிறந்த போட்டியாளர்கள் ஆடும் அந்த கேண்டிடேட்ஸ் தொடரை வெல்பவர்தான் உலக சாம்பியன் போட்டியில் ஆட முடியும். அதனால்தான் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெறுவது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. திவ்யா தேஷ்முக்குக்கு வயது 19 தான். உலகத் தரவரிசையில் 18 வது இடத்தில் இருக்கிறார். இந்த உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனையான தான் ஷாங்யிக்கு எதிராக திவ்யா மோதியிருந்தார். சீன வீராங்கனை அனுபவமிக்கவர். அவருக்கு எதிராக திவ்யா கொஞ்சம் பலவீனமான போட்டியாளராகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், சிறப்பாக ஆடி இந்தப்…

1 3 4 5 6 7 357