Browsing: விளையாட்டு

IND vs SA | பேட்டிங்கில் அசத்திய ருதுராஜ், இஷான் கிஷன்; இந்தியா 179 ரன்கள் குவிப்பு | team india scored 179 runs against south africa third t20i ruturaj ishan kishan

விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் அரை சதம் பதிவு செய்து அசத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். அந்த அணி இந்தத்…

ஏஎப்சி ஆசிய கோப்பைக்கு தொடர்ந்து 2வது முறையாகத் தகுதி – News18 Tamil

பிலிப்பைன்ஸை 4-0 என்ற கோல் கணக்கில் பாலஸ்தீனம் வென்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக AFC ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது, காரணம் இதுவரை ஏஎப்சி ஆசியக் கோப்பை தொடரில் இரண்டு முறை தொடர்ச்சியாக தகுதி பெற்றதில்லை. எனவே இது ஒரு புதிய வரலாறு, ஒரு புதிய சாதனை.ஆசியாவின் மிகப்பெரிய கான்டினென்டல் கால்பந்து போட்டியில் இந்திய அணி பங்குபெறுவது இது ஐந்தாவது முறையாகும்.1964, 1984, 2011, 2019ம்…

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44 ஆயிரம் கோடிக்கு ஏலம் – டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றிய வையாகாம் 18 | Media rights sale: BCCI nets Rs 44,075 cr. on day 2

புதுடெல்லி: 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ரூ.44,075 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ரூ.23,575 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேவேளையில் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிரித்து ஏலம் விடுவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டது. மின்னணு ஏலத்தின் 2-ம்…

தினேஷ் கார்த்திக்கிற்கு முன் அக்சர் படேலை இறக்கியது சரியே- ஷ்ரேயஸ் அய்யர்

நேற்று கட்டாக்கில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய தோல்விக்கு பல காரணங்களில் ஒரு காரணமாக, தினேஷ் கார்த்திக்கிற்கு முன்பாக பவுலர் அக்சர் படேலை கேப்டன் ரிஷப் பண்ட் இறக்கிவிட்டது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஆட்டத்தின் லெஜண்ட்கள் ரிஷப் பண்ட்டை சாடினர், ஆனால் அக்சர் படேலை முன்னால் இறக்கியது சரிதான் என்கிறார் ஷ்ரேயஸ் அய்யர்.இஷான் கிஷன், பண்ட், ஹர்திக் பாண்டியா சடுதியில் வெளியேற இன்னும் 7 ஓவர்கள் மீதமிருக்கையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்கை இறக்கி விடாமல்…

”ஐபிஎல் மீடியா உரிமத்துக்கு இப்படி ஓர் உயரிய நிலையா?!” – சுனில் கவாஸ்கர் வியப்பு | never thought IPL media rights reach such a level Sunil Gavaskar

மும்பை: ஐபிஎல் மீடியா உரிமம் இப்படி ஓர் உயரிய நிலையை எட்டும் என தான் ஒருபோதும் நினைக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 2023-2027 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் என இரண்டும் சேர்த்து ரூ.44,070 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல். இது 2018-2022 வரையிலான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்…

ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற, ஒலிம்பிக் வீரர் ஹரி சந்த் காலமானார்

ஆசியப் போட்டிகளில் 2 தங்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர் ஹரிசந்த் ஹோஷியர்பூரில் காலமானார், இவருக்கு வயது 69.ஓட்டப்பந்தய வீரர் ஆன ஹரிசந்த் ஏப்ரல் 1, 1953-ல் பஞ்சாப், ஹோஷியார்பூர், கோரேவா கிராமத்தில் பிறந்தார். நீண்ட தூர ஓட்டத்தில் இதுவரை இந்தியாவிலிருந்து ஆடிய மிகப்பெரிய வீரர் ஹரி சந்த் தான். 1976 மாண்ட்ரீலில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் 10,000 மீ தடகள ஓட்டத்தில் 8வது வீரராக வந்தார். இது அப்போதெல்லாம் இந்தியாவைப் பொறுத்தவரை…

IND v SA: புவியின் மாஸான பௌலிங்கைத் தாண்டியும் வென்ற தென்னாப்பிரிக்கா; மீண்டும் சொதப்பிய இந்தியா! – India’s poor batting and spin bowling leads to another defeat against south africa

நின்று நிதானமாக ஆடிய பவுமா 35 ரன்களில் சஹாலின் பந்தில் ஆட்டமிழந்த போதும், க்ளாசென் மட்டும் நின்று அதிரடி காட்டினார். அரைசதத்தைக் கடந்து 81 ரன்களை அடித்துவிட்டே அவுட் ஆகியிருந்தார். அவர் அவுட் ஆகி பெவிலியனுக்குச் சென்ற போது ஏறக்குறைய ஆட்டமே முடிந்துவிட்டது. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை ஆடிவிட்டுதான் க்ளாசென் அவுட் ஆகியிருந்தார். 18.2 ஓவர்களிலேயே தென்னாப்பிரிக்க அணி டார்கெட்டை சேஸ் செய்து முடித்தது. இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியிலும் தோல்வியைத் தழுவியது.கடந்த போட்டியில்…

கனா படத்தை பார்த்து கிரிக்கெட்டில் சாதித்த தமிழக வீராங்கனை | அண்டர் 19 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அமீரக அணி | TN player gave life to her dream by kana movie UAE team qualifies Women U19 WC

கனா படத்தை பார்த்து கிரிக்கெட் விளையாட்டில் சாதித்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை தீர்த்தா சதீஷ். இவர் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வருகிறார். 2023 அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆசிய அணிகளுக்கான தகுதிச் சுற்று போட்டிகள் மலேசிய நாட்டில் நடைபெற்றன. இதில் ஐக்கிய அரபு அமீரக அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார் தமிழகத்தை சேர்ந்த தீர்த்தா சதீஷ். இடது…

2-வது டி20-ல் தெ. ஆப்பிரிக்காவுடன் இன்று இந்தியா மோதல்

கட்டாக்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக அமைந்த நிலையில் பந்து வீச்சு எந்த ஒரு…

1 418 419 420 421 422 442