ENG v IND: பேட்டர் பும்ரா தீர்த்துவைத்த இங்கிலிஷ் கணக்கு! | captain bumrahs batting lifts team india to sky
98/5 என்ற மோசமான நிலையில் தத்தளித்து கொண்டிருந்த இந்திய அணி பண்ட், ஜடேஜா இருவரும் சதத்தாலும் 375 ரன்களை எட்டியிருந்தது. ஒட்டுமொத்த ட்ரெஸ்ஸிங் ரூமும் உச்சகட்ட நம்பிக்கையில் இருந்த நேரம். கேப்டன் பும்ராவுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு சிறு உந்துதல் தேவைப்பட்டிருக்கும் போலும். தொடரை நிர்ணயிக்கப்போகும் கடைசி டெஸ்ட், கேப்டனாக முதல் போட்டி என பும்ராவின் மனதில் ஓடிக்கொண்டிருந்த இவை அனைத்திற்குமான ரிலீஸ் பாயிண்டாக அமைந்தது ஸ்டுவர்ட் ப்ராடின் அந்த ஒற்றை ஓவர். அதில்…









