Browsing: விளையாட்டு

ஓவல் டெஸ்ட்டில் பும்ராவுக்குப் பதில் ஆகாஷ் தீப்! | ENG vs IND fifth abd final test: Akash Deep to replace Bumrah in Oval Test

இந்தியா தொடரைச் சமன் செய்வதற்கும் இங்கிலாந்து தொடரை 3-1 என்று கைப்பற்றுவதற்குமான 5வது டெஸ்ட் போட்டி நாளை ஓவலில் தொடங்குகிறது. இத்தகைய முக்கியமானதொரு போட்டியில் இந்திய அணியின் முன்னணிப் பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பதிலாக ஆகாஷ் தீப் அணிக்குள் வருகிறார். நீண்ட கால உடல்தகுதியை முன்னிட்டு பும்ராவின் முதுகைக் காயங்களிலிருந்து காக்கவும் இந்த முடிவு எடுக்கபப்ட்டதாக மருத்துவக் குழுவினர் பும்ராவிடம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே பும்ரா 3 டெஸ்ட் போட்டிகளில்தான் ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

ENG vs IND: ‘நான் மட்டும் கேப்டனா இருந்திருந்தா இங்கிலாந்து அணியை.!’ – சுனில் கவாஸ்கர் காட்டம்

இங்கிலாந்து மறந்து விட்டதுஅங்கே இரு அணிகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே போட்டி முடியும், இல்லையென்றால் எதிரணி முடிவை ஏற்க வேண்டும் என்பதை இங்கிலாந்து மறந்து விட்டது போல் தெரிகிறது. சொல்லப்போனால் 80களில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களிடம் சதத்தை அடிக்க எங்களுடைய பேட்ஸ்மேன்களை பவுலிங் போட சொல்லட்டுமா? என இங்கிலாந்தினர் கிண்டல் செய்தனர். அப்படி கிண்டலடித்த அவர்கள் இங்கிலாந்தின் முன்னணி பவுலர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் 4 மணிநேரம் எதிர்கொண்டு 80 ரன்களை தொட்டனர் என்பதை மறந்து விட்டனர். டெஸ்ட் கிரிக்கெட்டில்…

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஸ்மிருதி மந்தனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் ஸ்கைவர் பிரண்ட் | Sciver-Brunt overtakes Smriti Mandhana

துபாய்: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் தரவரிசை பட்​டியலில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. இதில் பேட்​டிங்​கில் இந்​தி​யா​வின் ஸ்மிருதி மந்​த​னாவை பின்​னுக்​குத் தள்ளி முதலிடம் பிடித்​தார் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் நாட் ஸ்கைவர் பிரண்ட். அதேவேளை​யில் கேப்​டன் ஹர்​மன் பிரீத், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் ஆகியோர் முன்​னேற்​றம் அடைந்​துள்​ளனர். தரவரிசை​யில் நாட் ஸ்கைவர் பிரண்ட் கடைசி​யாக 2023-ம் ஆண்டு முதலிடம் வகித்​திருந்​தார். சமீபத்​தில் இந்​தி​யா​வுக்கு எதி​ராக நடை​பெற்ற ஒரு​நாள் போட்டி தொடரில் 32 வயதான நாட் ஸ்கைவர் பிரண்ட் 160 ரன்​கள்…

கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன? | heated exchange between team india coach Gambhir vs Oval pitch curator

லண்டன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘ஓவல்’ மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் இடையே செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அது குறித்து விரிவாக பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி வரும் வியாழக்கிழமை அன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி…

5 செஷன்கள் விளையாடுவது எளிதல்ல: சொல்கிறார் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் | Playing for 5 sessions is not easy: Gautam Gambhir

மான்செஸ்டர்: இங்​கிலாந்து அணிக்கு எதி​ராக மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டியை இந்​திய அணி அபார​மாக விளை​யாடி டிரா செய்​தது. 311 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடி இந்​திய அணி ரன் கணக்கை தொடங்​கும் முன்​னரே 2 விக்​கெட்​களை பறி​கொடுத்த போதி​லும் கேப்​டன் ஷுப்​மன் கில், கே.எல்​.​ராகுல் ஜோடி அபார​மாக விளை​யாடி 3-வது விக்​கெட்​டுக்கு 188 ரன்​கள் குவித்​தது. ஷுப்​மன் கில் 103 ரன்​களும், கே.எல்​.​ராகுல் 90 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்த நிலை​யில் ரவீந்​திர…

Dhoni; Jadeja; 2010-ல் ஜடேஜா பற்றி தோனி கூறியதை பத்திரிகையாளர் நினைவுகூர்ந்திருக்கிறார்.

இது தவிர இங்கிலாந்தில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் இந்தியர்கள் பட்டியலில் பண்ட்டுக்கு அடுத்தபடியாக கங்குலியுடன் ஜடேஜா இணைந்திருக்கிறார்.மேலும், இங்கிலாந்தில் 30+ விக்கெட்டுகளும், 1000+ ரன்களும் அடித்த முதல் இந்திய வீரராகவும், ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது வீரராகவும் திகழ்கிறார்.ரவீந்திர ஜடேஜாhttps://x.com/BCCIஇதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தில் பேட்டிங் வரிசையில் 6 அல்லது அதற்கு கீழ் வரிசையில் இறங்கி அதிக அரைசதங்கள் அடித்த வீரராக (9 அரைசதங்கள்) சோபர்ஸுடன் (வெஸ்ட் இண்டீஸ்) முதலிடம் பகிர்ந்திருக்கிறார்.கடைசி டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அதையும் முழுதாக தனதாக்கிவிடுவார்.…

பிரான்ஸ் செஸ் போட்டி: இனியன் சாம்பியன் | French Chess Tournament: Iniyan Champion

பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரில், கடந்த 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025 ’ எனும் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது. 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 6 வெற்றி, 3 டிரா என 7.5 புள்ளிகளுடன் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் முதல் இடத்தைப் பெற்று, போலாந்தின் மலேக் ஜான் உடன் சமன் செய்தார். வெற்றியாளரை நிர்ணயம் செய்ய நடைபெற்ற முதல் ரேபிட் போட்டி டிரா…

divya deshmukh; FIDE: ‘வரலாற்றுச் சாதனை’ – உலக செஸ் சாம்பியன் திவ்யா; வெள்ளி வென்ற கோனேரு; குவியும் வாழ்த்துகள்!

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மோதிய திவ்யா தேஷ்முக் VS கோனேரு ஹம்பி இருவரும் இந்தியர்கள். இன்று, டைபிரேக் சுற்று நடைபெற்ற நிலையில், கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் திவ்யா தேஷ்முக். அதனால், உலக ரேபிட் சாம்பியன் பட்டத்தை வென்ற கோனேரு ஹம்பிக்கு இதில் வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது. உலக செஸ் சாம்பியன் திவ்யா, வெள்ளி வென்ற கோனேருமகளிர் செஸ் உலகக் கோப்பையை முதல்முறையாக இந்தியப் பெண் வென்றதும்,…

‘ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது’ – இங்கிலாந்துக்கு ஸ்மித் வார்னிங் | australia pitches will not batting friendly steve Smith warns England

லண்டன்: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது என இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்களுக்கு ஸ்டீவ் ஸ்மித் வார்னிங் கொடுத்துள்ளார். ஆண்டர்சன் சச்சின் டிராபி தொடரில் இங்கிலாந்து மைதானங்கள் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு ஏதுவாக தட்டையானதாக இருப்பது பேசு பொருளாகி உள்ளது. இந்த கருத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும் முன்வைத்துள்ளார். “ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். சில காலமாக இங்கிலாந்தில் ரன் குவிப்புக்கு ஏதுவான தட்டையான ஆடுகளங்களில் அவர்கள் விளையாடி…

Divya Deshmukh: “19 வயதில் வரலாற்று சாதனை” – மோடி, ராகுல் காந்தி வாழ்த்து!

“Divya Deshmukh-ஐ நினைத்துப் பெருமையடைகிறேன்” – மோடிஅந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இறுதிப்போட்டி!2025 ஆம் ஆண்டுக்கான FIDE மகளிர் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை நினைத்துப் பெருமையடைகிறேன். பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் அவரது இந்தக் குறிப்பிடத்தக்கச் சாதனைக்காக வாழ்த்துகிறேன்.இந்த சாம்பியன்ஷிப் தொடர் முழுவதும் கோனேரு ஹம்பி அபாரமான திறமையை வெளிப்படுத்தினார்.இரண்டு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகள்…