Browsing: விளையாட்டு

England vs South Africa 1st test Lords – South Africa leads by 161 runs in first innings against England, லார்ட்ஸ் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 326 ரன்களுக்கு ஆல் அவுட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.நேற்றைய ஸ்கோர் 289/7 என்று இன்று தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் முந்தைய நாள் நாட் அவுட் வீரர் ரபாடா அதே 3 ரன்களில் வெளியேறினார், பாட்ஸ் வீசிய பந்தை வைடு மிட் ஆனில் புல் ஷாட் ஆடினார் ரபாடா, பந்து பிராடைத் தாண்டிச் செல்லும் என்றுதான் தெரிந்தது, ஆனால் பிராட் அட்டகாசமாக பிடித்தார்,…

தேசிய கீதம் பாடுவதற்கு முன்… கே.எல்.ராகுலின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு | cricketer KL Rahul spits bubble gum before singing National Anthem Fans applaud

ஹராரே: தேசிய கீதம் பாடுவதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்டிங் கேப்டன் கே.எல்.ராகுல், தன் வாயில் இருந்த பபுள் கம்மை துப்பியுள்ளார். அவரது இந்த செயலைக் கண்டு அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் ஜிம்பாப்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ளது. இரு அணிகளும் நேற்று ஹராரே மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்தத்…

WATCH: Sachin Tendulkar Recalls Nostalgic Moment From U-15 Debut Match at PYC Gymkhana, முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி பெவிலியன் வரை அழுதுகொண்டே வந்தேன்

சச்சின் டெண்டுல்கர் மும்பையின் 15 வயதுக்குட்பட்டோர் அணியில் முதன் முதலாக ஆடிய போது ரன் அவுட் ஆகி மைதானத்திலிருந்து பெவிலியன் வரை அழுது கொண்டே வந்ததாக வீடியோ ஒன்றில் தெரிவித்தார். அதே 17ம் தேதி சச்சின் புனேயின் பிஒய்சி ஜிம்கானா மைதானத்தில் தான் முதன் முதலில் களமிறங்கியது, மைதானத்தின் அமைப்பு என்று விளக்கி ஒரு வீடியோவையும் தன் சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.தன் முதல் போட்டியில் மும்பை யு-15 அணிக்காக 4 ரன்களையே அடித்தார் சச்சின். ஆனால் அந்தத்…

பிரீமியர் லீக் Week 2: பாதாளத்தில் வீழ்ந்த மான்செஸ்டர் யுனைடட்; யுத்தத்தில் ஈடுபட்ட பயிற்சியாளர்கள்! | Highlights of English Premier League Week 2

பிரீமியர் லீக் போட்டி முடிவுகள் – கேம் வீக் 2ஆஸ்டன் விலா 2 – 1 எவர்டன்ஆர்செனல் 4 – 2 லெஸ்டர் சிட்டிபிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் 0 – 0 நியூகாசிள் யுனைடட்மான்செஸ்டர் சிட்டி 4 – 0 போர்ன்மௌத்சௌதாம்ப்டன் 2 – 2 லீட்ஸ் யுனைடட்வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் 0 – 0 ஃபுல்ஹாம்பிரென்ட்ஃபோர்ட் 4 – 0 மான்செஸ்டர் யுனைடட்நாட்டிங்ஹம் ஃபாரஸ்ட் 1 – 0 வெஸ்ட் ஹாம் யுனைடட்செல்சீ 2 -…

“தயவுசெய்து, இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” – விவாகரத்து குறித்து இந்திய வீரர் சாஹல் | Yuzvendra Chahal Clarifies Divorce Rumours With Wife Dhanashree

மும்பை: தனது மனைவியுடனான விவாகரத்து செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் கேட்டுக்கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். இவர் டிசம்பர் 2020ல் தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்தார். சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீயும் ஒன்றாக வெளியிடும் ஷார்ட் வீடியோக்கள் இணைய உலகில் மிகப்பிரபலம். இதனிடையே, சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக சில தினங்களாக செய்திகள் வெளிவந்தன. அதனை தற்போது மறுத்துள்ளார்…

ஜிம்பாவே அணியுடனான முதல் ஓடிஐ போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரேயில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஜிம்பாப்வே 189 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 83/6 என்ற நிலையிலிருந்து பின் கள வீரர்கள் நன்றாக ஆடி ஸ்கோரை 189 ரன்களுக்குக் கொண்டு வந்தனர், ஆனால் ஜிம்பாப்வே 40.3 ஓவர்கள்தான் தாக்குப் பிடித்தனர்.அதிகபட்சமாக ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சகப்வா 51 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் 110/8 என்ற நிலையில் இருந்த ஜிம்பாவே, 9 ஆவது…

`புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்’- நினைவுகள் பகிரும் ராஸ் டெய்லர் | ‘owner slapped me’ ross taylor shares his days of ipl

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் இந்த வருட தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் தன் சுயசரிதை நூலை வெளியிட்டார் அவர். அதில் தன் கிரிக்கெட் வாழ்வு தொடங்கி சக அணி வீரர்கள் மற்றும் எதிரணி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘ப்ளாக் அண்ட் வைட்’ எனும் தலைப்பிலான தன் சுயசரிதை நூலில் நிறப்பாகுபாட்டால் தான் பாதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும்…

லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணி திணறல்

லார்ட்ஸ்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து திணறியது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 55 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்களை இழந்தது. அலெக்ஸ் லீஸ் 5, ஸாக் கிராவ்லி 9, ஜோ ரூட் 8, ஜானி பேர்ஸ்டோ 0 ரன்களில் நடையை கட்டினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 20, பென் ஃபோக்ஸ்…

India’s FTP takeaways: marquee five-Test series, more T20Is, fewer ODIs, 3-வது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

2023-27ம் ஆண்டு சுழற்சிக்கான ஐசிசி எதிர்கால கிரிக்கெட் அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன, இதில் இந்தியாவுக்கு அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் கடினமான வெளிநாட்டுத் தொடர்கள் இடம்பெற்றுள்ளன.அதே வேளையில் மார்ச்-மே வரை ஐபிஎல் சாளரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3ம், 4ம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் இந்தியாவுக்கு கடினமாக அமைந்துள்ளன.அடுத்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டு ஆடுகிறது. 2025-27 ஐசிசி டெஸ்ட்…

அதிகாரப் போட்டி, நிர்வாகக் கோளாறு – தடையினால் தள்ளாடும் இந்தியக் கால்பந்து! தீர்வுதான் என்ன? – Indian football fans saddened over FIFA’s ban on AIFF

இந்திய ஆண்கள் அணியுமே எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லையெனினும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் இருக்கக்கூடும். இது சில அணிகளுக்கு பின்னடைவாகவும் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தடை உத்தரவு இந்திய கால்பந்திற்கு பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை முறையாக நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறபட்சத்தில் இந்தத் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும். மேலும், இதுதொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

1 387 388 389 390 391 443