Browsing: விளையாட்டு

”அடுத்த வாரத்தில் பெரிய கேக் வெட்டலாம்” – விராட் கோலி அளித்த உலகக்கோப்பை நம்பிக்கை | Virat Kohli wants to cut bigger cake next week after winning T20 World Cup for India

மெல்போர்ன்: இந்திய அணி சார்பாக விராட் கோலியின் பிறந்தநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதலிடத்தில் இருந்து வருகிறார். மேலும், வங்க தேசத்துடனான கோலியின் சிறப்பான ஆட்டம், அவரை விமர்சித்து வந்தவர்களை பாராட்ட வைத்துள்ளது. விராட் கோலியின் பிறந்தநாளான நேற்று அவருக்கு மேலும் வாழ்த்துக்கள்…

ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா?

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் போட்டி மழையால்  தடைபட்டால் பல விபரீதங்களை இந்திய அணி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப்-1ல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இடம் பிடித்துள்ள குரூப்-2யில் பெரும் குழப்பமான நிலையே நிலவி வருகிறது. இதனால் இந்தியா- ஜிம்பாவே, பாகிஸ்தான் -வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா -நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிகள் முடிந்த பின்னரே…

`துணிந்து நில்’ – ஆஃப் ஃபீல்டில் கவனம் ஈர்த்த விராட் கோலியின் அந்த மூன்று குணாதிசயங்கள்! | Happy Birthday Kohli – His 3 Off field qualities to cherish

கடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ரொம்பவே மோசமாக தோற்றிருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானுக்கு எதிராக முதல் போட்டியிலேயே தோற்றிருந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மீது எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், முகமது ஷமிக்கு எதிராக மட்டும் அவரின் மதத்தை குறிப்பிட்டு கேவலமான வசவுகளை அள்ளி வீசினர். ரசிகர்கள் பலரும் அந்த விமர்சனங்களுக்கு எதிராக #IStandWithShami என ஆதரவு குரல்களை எழுப்பினர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களுமே கூட ஷமிக்கு ஆதரவாகப் பேசியிருந்தனர். ஆனால், அவர்களின்…

T20 WC | இங்கிலாந்து கையில் ஆஸ்திரேலியாவின் ‘விதி’

சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளை குவித்து வலுவான ரன் ரேட்டுடன் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் அந்த அணியின் ரன் ரேட் (-0.173) குறைவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது இன்று நடைபெறும் இங்கிலாந்து – இலங்கை…

”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் ஆஸ்திரேலியா பேட் செய்த 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி,20 ஓவர்களில் முடிவில் 7…

T20 World Cup: W-W-W அசத்திய அயர்லாந்து வீரர்; இந்த உலகக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் சம்பவம்! | T20 World Cup – Ireland Bowler Little takes hat-trick against Newzealand

நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தனர். ஃபின் ஆலன் ஓர்அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். பின்னர் நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. கேப்டன் வில்லியம்சன் நின்று அடிக்கவே நியூசிலாந்து கொஞ்சம் மீண்டு வரத் தொடங்கியது. ரன்ரேட்டும் வேகம் பிடித்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் வில்லியம்சன் அப்படியே தொடர்ந்திருந்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்திருக்கக்கூடும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 61 ரன்களில் செட்டில் ஆகி நின்று அதிரடியைக் காட்டத் தொடங்கியிருந்த வில்லியம்சன், நீஷம்,…

T20 WC | ரஷித் அதிரடி… தோல்வி பயம் காட்டிய ஆப்கன்: 4 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி | t20 world cup afghanistan given threat to australia but won by 4 runs

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான். இருந்தாலும் இந்தப் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா. இந்தப் போட்டி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால்…

சென்னை அணியில் இருந்து ஜடேஜா விலகும் முடிவுக்கு செக் வைத்த தோனி? சிஎஸ்கே-வில் இருந்து விடுவிக்கபோகும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக அந்த தொடரில் இருந்து சென்னை அணி இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.இதனையடுத்து தொடரின் பாதியில் சென்னை அணிக்கு கேப்டனாக மீண்டும் தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு…

“சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம்; இருப்பினும் அவர் சிறந்த கேப்டன்”- சதாப் கான்! | Shadab Khan talks about pakistan captain babar azam.

ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதற்குக் காரணம் பாபர் அசாமின் தலைமைதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்கூட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்ஸி சரியில்லை என்று விமர்சித்திருந்தார்.இதனிடையே பலரும் பாபர் அசாம்மை விமர்சித்து வந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்திருக்கிறார். சதாப்…

T20 WC அலசல் | படுமோசமான ஃபீல்டிங், பவுலிங், பேட்டிங்: தென் ஆப்பிரிக்காவின் ‘மோசமான’ தினத்தில் பாகிஸ்தான் துவம்சம்! | t20 wc terrible fielding bowling batting south africa s worst day for pakistan

சிட்னியில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் 2 அட்டவணையில் +1.117 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி எந்தவித இடையூறும் இல்லாமல் நெதர்லாந்தை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.…

1 350 351 352 353 354 443