மும்பை இந்தியன்ஸ்: “ரோஹித்திற்கு இழைக்கப்பட்ட அநீதி” – மனோஜ் திவாரி சாடல்” – மனோஜ் திவாரி | Mumbai Indians: “Injustice Done to Rohit” – Manoj Tiwary Slams

Share

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான செயல்பாடுகளைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

ஹர்திக் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ரோஹித் சர்மாவிடமே கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

நடப்பு சீசனில் விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில், மும்பை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி, மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே எளிதாக வீழ்த்தியது.

இது இந்தத் தொடரில் மும்பை அணிக்கு ஏற்பட்ட 4-வது தோல்வியாகும். புள்ளிப்பட்டியலில் தற்போது அந்த அணி 9-வது இடத்துக்குச் சென்று தத்தளித்து வருகிறது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

மார்ச் 29 அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராகப் பெற்ற வெற்றி மட்டுமே இந்த சீசனில் மும்பை அணிக்குக் கிடைத்த ஒரே ஆறுதலாகும்.

இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த மனோஜ் திவாரி, “கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு தரம் குறைந்தே காணப்படுகிறது. 2013 முதல் 2023 வரை ரோஹித் சர்மா அணியை ஐந்து முறை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தினார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com