Browsing: விளையாட்டு

ஹாக்கியில் தமிழக அணி வெற்றி! | tamil nadu team won in hockey

சென்னை: எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு – இந்திய ராணுவ அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் பாலசந்தர் 34 மற்றும் 59-வது நிமிடங்களில் பீல்டு கோல் அடித்து அசத்தினார். சதீஷ் (14-வது நிமிடம்), பட்ராஸ் திர்கே (32-வது…

லார்ட்ஸ் டெஸ்ட்டில் பும்ரா அபாரம்: இங்கிலாந்து 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்: ENG vs IND | england all out for 387 runs in first innings of lords test versus team india

லண்டன்: இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா. ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251…

டியூக்ஸ் பந்தின் தரம் மோசம்: தயாரிப்பு நிறுவனத்தை சாடிய ஸ்டூவர்ட் பிராட் | ENG vs IND | Dukes ball quality Stuart Broad slams manufacturers ENG vs IND lords test

லண்டன்: டியூக்ஸ் பந்தின் தரம் மோசமாக உள்ள நிலையில்., அது தொடர்பாக பந்தின் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்தின் தரம் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த், டியூக்ஸ் பந்துகள் விரைந்து அதன் வடிவத்தை இழப்பதாக சொல்லி இருந்தார். இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட்டில்…

‘தன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா என்னிடம் சொன்னார்’ – வியான் முல்டர் பகிர்வு | Lara told me I should have broken his record wiaan Mulder shares

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் தன் 400 ரன் சாதனையை முறியடிக்க முயற்சித்திருக்கலாம் என லாரா தன்னிடம் கூறியதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் வியான் முல்டர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்களை வியான் முல்டர் எடுத்திருந்தார். இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு நேர பிரேக்குக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் லாராவின் 400 ரன் சாதனையை முறியடிக்காமல் முல்டர்…

‘Baz Baz Bazball…’ எங்க பாஸ்? நான் அதைப் பார்க்கணும்: ரூட்டை சீண்டிய சிராஜ் | boss where is the Bazball I want to see Siraj sledges joe Root lords test

பர்மிங்ஹாம் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணி அந்தத் தோல்வியினால் எப்படி மனம் உடைந்து போயுள்ளது என்பதற்கு நேற்றைய இங்கிலாந்தின் டாஸ் முடிவு, மெதுவான ஆட்டம் போன்றவை சாட்சியமாக நிற்கின்றன. 3.02 ரன் ரேட்டில்தான் இங்கிலாந்து நேற்று ஸ்கோர் செய்தது. பாஸ்பால் யுகம் என்று கூறப்பட்டதற்கு இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆப்பு வைத்து விட்டார் போலும். ஷுப்மன் கில்லும், ‘அறுவையான மந்த கிரிக்கெட்டுக்குத் திரும்புவோம்’ என்று அவ்வப்போது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். முகமது சிராஜ், ஜோ…

ENG vs IND: "அடுத்த 3 போட்டிகளில் அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்" – சுப்மன் கில் குறித்து கங்குலி

இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 25 வயதான இவர் இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் ஒரு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார். சுப்மன் கில்மேலும், கேப்டன் பதவியைப் பெற்ற பிறகு அவரது பேட்டிங் முன்னேறி இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளில் மட்டுமே அவர்…

‘3-ம் நிலைக்கு கருண் நாயர் தேற மாட்டார்’ – சாய் சுதர்சனை பரிந்துரைக்கும் மஞ்ச்ரேக்கர் | Karun Nair will not fit for 3rd position – Manjrekar recommends Sai Sudharsan

லீட்ஸில் தோற்று, எட்ஜ்பாஸ்டனில் வரலாற்று வெற்றி பெற்றாலும் அணிச் சேர்க்கையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சனக் கருத்தை முன்வைத்துள்ளார். கருண் நாயர் லீட்ஸில் ஸ்கோர் 400-க்குப் பிறகு இறங்கியும் சரியாக ஆடவில்லை, இரண்டாவது இன்னிங்சிலும் சொதப்பல், பர்மிங்ஹாமிலும் திருப்திகரமாக ஆடவில்லை ஆகவே அவர் 3-ம் நிலைக்கு லாயக்கில்லை, சாய் சுதர்சனைக் கொண்டு வர வேண்டியதுதான் என்கிறார் மஞ்ச்ரேக்கர். “கடந்த டெஸ்ட்டில் சுவாரஸ்யமான அணித்தேர்வுகள் நடைபெற்றன. அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வெற்றி…

Salem: சர்வதேச போட்டிகளில் சேலம் பாரா வீரர்கள்; பயணச் செலவுக்கு அரசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலம்

சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு பஹ்ரைனில் நடைபெற்ற சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளில் இந்திய அணி சார்பில் பங்கேற்று இந்த வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.இம்மாதம் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச பாரா டேக்வாண்டோ போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தகுதி பெற்றுள்ளதுடன், கடுமையான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்றதற்குத் தேவையான பயணச்…

‘லாராவின் 400 சாதனையை உடைக்க கிட்டிய வாய்ப்பு இனி வருமா?’ – முல்டர் மீது ஸ்டோக்ஸ் ஆதங்கம் | Will the chance to break Lara 400-run record come again? – Stokes doubts Mulder

ஜிம்பாப்வேயிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்து லாரா ரெக்கார்டை முறியடிக்க விரும்பவில்லை என்று டிக்ளேர் செய்தார். இது கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதாகும், இனி அந்த வாய்ப்பு முல்டருக்குக் கிடைக்குமா என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆதங்கப்பட்டுள்ளார். இந்தியா-இங்கிலாந்து லார்ட்ஸ் டெஸ்ட்டை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்த பென் ஸ்டோக்ஸ், “வேறு கேப்டனாக இருந்து இந்த முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை. வியான்…

ENG vs IND: 'ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட எதையும் எதிர்பார்க்க முடியாது'-கில்லை பாராட்டிய சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது.இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427…

1 10 11 12 13 14 357