Browsing: விளையாட்டு

`ரூ.18,000 கோடிக்கு விலை போகிறதா RCB? போட்டிபோடும் இரண்டு நிறுவனங்கள்!

ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2025-ல் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, அணியின் மவுசு கூடியிருக்கிறது. தற்போது இந்த அணியின் மதிப்பு சுமார் ₹18,000 கோடி வரை உயர்ந்துள்ளது. இந்த மெகா டீமை வாங்குவதற்கு உலகத் தரம் வாய்ந்த இரண்டு பெரிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு இந்த அணியை விஜய் மல்லையா தொடங்கினார், ஆனால் 2016 ஆம் ஆண்டு…

CSK: ‘பணத்தை தேவையில்லாமல் செலவு செய்யாதே சேமித்து வை’- தோனி குறித்து பிரசாந்த் வீர்|CSK: “Don’t spend money unnecessarily—save it,” says Prashant Veer about MS Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சமீபத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் ஏலத்தில் 20 வயதுடைய இளம் வீரர் பிரசாந்த் வீரை சுமார் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இவ்வளவு பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரசாந்த் வீர், தோனியுடனான தனது முதல் சந்திப்பு குறித்து சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். தோனி கொடுத்த அட்வைஸ்”Sports Star’-ன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்த் வீர், “மஹி பாய் என்னை முதலில் சந்தித்தப்போது கிரிக்கெட் பற்றி அதிகம் பேசவில்லை. ஐபிஎல் ஒப்பந்தம்…

“கம்பீர் நினைத்தால், நானும், விராட், ரோஹித்தும் விலகுவது தப்பில்லை" – அஷ்வின் ஓப்பன் டாக்

கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நடுவே, ரவிச்சந்திரன் அஷ்வின் அறிவித்த ஓய்வு முடிவு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அனில் கும்ப்ளேவின் (619 விக்கெட்டுகள்) சாதனையை முறியடிக்க வாய்ப்பிருந்தும், 537 விக்கெட்டுகளுடன் அஷ்வின் ஏன் திடீரென விடைபெற்றார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த ‘RevSportz Conclave’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அஷ்வின், “பெர்த் டெஸ்டில் ஜடேஜாவும் நானும் முதன்மை ஸ்பின்னர்களாக இருந்தோம். ஆனால் வாஷிங்டன்…

அப்ரார் அகமது ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் வலுக்கும் எதிர்ப்புகளும் – ஒரு முழு அலசல்!| Sunrisers Sign Abrar Ahmed – Rising Backlash and Controversy Explained | Full Analysis

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஐபிஎல், பிபிஎல், சிபிஎல் போன்று டி20 லீக் போட்டிகளுக்கு மாற்றாக நூறு பந்துகளைக் கொண்ட “தி ஹண்ட்ரட் லீக்’ போட்டிகள் பிரிட்டனில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பர்மிங்காம் பீனிக்ஸ், லண்டன் ஸ்பிரிட், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ், சன்ரைசர்ஸ் லீட்ஸ், ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் வெல்ஷ் ஃபயர் உள்ளிட்ட 8 அணிகள் இருக்கின்றன. ‘தி ஹண்ட்ரட் லீக்’தி…

சர்வதேச போட்டிகளை விட IPL-ல் அதிக சம்பளம் வாங்கும் அம்பயர்கள்! – ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் வீரர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதேபோல ஆட்டத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்மையாகக் கவனித்து, மைதானத்தின் அழுத்தங்களுக்கு நடுவே சரியான தீர்ப்புகளை வழங்கும் அம்பயர்களின் பங்கும் ஆட்டத்தில் முக்கியமானது தான். மைதானத்தில் அம்பயர்கள்அம்பயர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?ஒரு சிறிய தவறு நடந்தாலும் அது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றிவிடும். இந்த கிரிக்கெட் அம்பயர்கள் தங்களுடைய பணிக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்று தெரியுமா?இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில், நடுவர்கள் நான்கு நாள் போட்டிக்கு கிட்டத்தட்ட 1.6 லட்சம்…

IPL 2026: “தோனியும், சிஎஸ்கே ரசிகர்களும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்”- சஞ்சு சாம்சன்| “I will live up to the trust that Dhoni and CSK fans have placed in me” – Sanju Samson

தோனி குறித்து பேசிய சாம்சன், “நான் தோனி பாயுடன் போனில் பேசியிருக்கிறேன். தவிர இந்திய அணியின் முகாம்களில் பார்த்திருக்கிறேன். அவரோடு ஒரே அணியில் விளையாடுவது இதுவே முதன்முறை. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. ஐபிஎல் நடைபெறும் இரண்டு மாதங்கள் ஒரே டிரெஸிங் ரூமில் இருப்பது, அவர் எப்படி போட்டிகளுக்குத் தயாராகிறார் என்பதைக் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். சஞ்சு சாம்சன்தலையாக இருப்பதற்கோ, வாலாக இருப்பதற்கோ நான் சிஎஸ்கே-விற்கு செல்லவில்லை. அங்கு ஒரே தல-தான் அது சிஎஸ்கே…

IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறியது ஏன்? – மனம் திறந்த சஞ்சு சாம்சன்

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி மார்ச் 30 ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து களமிறங்குகிறது. குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க இருக்கிறார். சஞ்சு சாம்சன்இந்நிலையில் PTI- க்கு பேட்டி அளித்திருக்கும் சஞ்சு சாம்சன், “ஐபிஎலில் இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினேன். தற்போது முதல் முறையாக அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அவர்களுக்கு எதிராக…

காபூல் தாக்குதல்: "இது போர்க்குற்றம்; ரமலான் மாதத்தில் நடந்த இந்தத் தாக்குதல்.!"- ரஷீத் கான் வேதனை

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று (மார்ச். 17) பாகிஸ்தான் கொடூரத் தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 250-க்கும் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான், ” காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் போன்ற கட்டமைப்புகளைத்…

BCCI: “தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு நான் செய்திருக்கிறேன்.!”- டிராவிட்| “I Have Made a Significant Contribution to Team India” – Rahul Dravid

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருதை வாங்கியப் பிறகு மேடையில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் , ” இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது. ராகுல் டிராவிட்நான் இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலானத் தனது நீண்ட பயணத்தை…

பெருங்கனவை நோக்கி பெடல்களை மிதிக்கும் கல்லூரி மாணவி – சாதிக்க தடை போடும் பொருளாதாரப் பிண்ணனி!

சேலம் மாவட்டம், மரவனேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிதா, கடந்த சுமார் இரண்டு ஆண்டுகளில் மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டி போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகள் பெற்று அசத்தியிருக்கிறார்.ஆனால் இந்த மிதிவண்டிப் போட்டி என்பது மற்ற விளையாட்டுகள் போன்று அல்லாமல், பொருளாதார ரீதியாக வலுவான பின்னணியைக் கொண்ட போட்டியாளர்களால் மட்டுமே பங்கேற்கக்கூடிய அளவில் இருக்கிறது. இதற்கு இந்த விளையாட்டில், மிதிவண்டி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் விலை மிக அதிகமாக இருப்பதும், காரணமாக இருக்கிறது. அதேபோல, இதற்கான…

1 8 9 10 11 12 442