Ananda Vikatan – 29 April 2015 – நல்ல சோறு
ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டுமே, ஆரோக்கியம் நம் உடலில் குடியேறிவிடுமா? நாம் உண்ணும் உணவு அளவுக்கு, உடலுக்கு உழைப்பும் தேவை. அப்போதுதான் ஆரோக்கியம் சாத்தியம். நம் தாத்தா, பாட்டியெல்லாம் கேப்பை, குதிரைவாலி சாப்பிட்டுவிட்டு, அது துளியும் மிச்சம் இல்லாமல் செரிக்கும் அளவுக்கு வயல்களில் மணிக்கணக்கில் வேலை செய்தார்கள். அதனால்தான் டயபடிக்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலே ஆயுள் முழுக்க வலம்வந்தார்கள். ஆக, பாரம்பர்ய உணவுக்குத் திரும்புவது போல, உடல் உழைப்பை மீட்டெடுப்பதும் இப்போது அதிஅவசியம். வருடக்கணக்கில் வளையாமல் இருந்த…









