”டெல்லி மாணவர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” – ஆர்எஸ்எஸ் ஆதரவாளரின் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணை | “Delhi students should be shot dead” – Inquiry into controversial remarks by RSS supporter

Share

டெல்லி மாணவர்கள் போரட்டம் குறித்து யூ டியூப் மூலம் கேரளத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரான டி.ஜி.மோகன்தாஸ் சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதில், “ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல மூன்று முறை உத்தரவிட்ட பிறகு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும்.

அதில் பலர் உயிரிழக்கவும், உறுப்புகளை இழக்கவும் நேரிடும். வெறும் நான்கு மணி நேரத்திற்குள் நிலைமையைச் சீராக்கி பிணங்களை அப்புறப்படுத்திவிடலாம்” எனப் பேசியிருந்தார்.

மற்றொரு வீடியோவில் பேசிய அவர், “டெல்லியில்​ போராட்டம் நடக்கும் இடத்தில் இருந்து காவல்துறையை முழுமையாக விலக்கிக்கொண்டு, அதை போராட்டக்காரர்களிடமே ஒப்படைத்தால் அங்கு கொலைகளும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளும் நடக்கும்.

கடவுளின் அருளால் அதைப் பற்றி யாரும் புகார் செய்ய மாட்டார்கள். பாலியல் வன்கொடுமையை விரும்பும் பெண்கள்தான் அங்கு இருக்கிறார்கள். குறிப்பாக இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இத்தகைய விஷயங்களை விரும்புபவர்கள்” எனவும் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

டெல்லி மாணவர்கள் போராட்டம்

டெல்லி மாணவர்கள் போராட்டம்

சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்ட முயன்ற டி.ஜி.மோகன்தாஸ் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சி.பி.எம் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ, மற்றும் ஏ.ஐ.ஒய்.எஃப் ஆகிய அமைப்புகள் காவல்துறையிலும் மாநில உள்துறை அமைச்சகத்திலும் புகார் அளித்தன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், “மாற்றுக்கருத்துடையவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்ற சங்க பரிவார அமைப்புகளின் எண்ணமே இதுபோன்ற கொடூரமான கருத்துக்களின் மூலம் வெளிப்படுகிறது. 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com