வீட்டில் காய்கறிகளே இல்லையா.. முட்டை இருந்தால் போதும்… செட்டிநாடு சுவையில் அசத்தல் குழம்பு தயார்..!
வீட்டில் முட்டை இருந்தால் போதும் சமையல் செய்வோருக்கு கவலையே வேண்டாம். அதை வைத்து குழம்பு, பொரியல் என விருந்தே வைத்துவிடலாம். அதிலும் செட்டிநாட்டு கைப்பக்குவத்தை கொஞ்சம் சேர்த்துக்கொண்டால் போதும் தெருவே மணக்க குழம்பு தயாராகிடும். அந்த வகையில் முட்டை கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை சட்னி, தோசை , சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.தேவையான பொருட்கள் :முட்டை – 5வெங்காயம் – 1எண்ணெய் – 5 tspஉப்பு – 1 1/2 tspமிளகாய் தூள்…









