காரசாரமாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி பொடி அரைப்பது எப்படி..? ரெசிபி இதோ…
என்னதான் இட்லிக்கு சட்னி, சாம்பார் என செய்தாலும் இட்லி மிளகாய்ப்பொடி மருக்க முடியாத செம்ம காம்பினேஷன் தான். அதிலும் மினி இட்லியை நெய் விட்டு இட்லி பொடியில் பிரட்டி தாளித்து சாப்பிடப்படும் பொடி இட்லியில் கிடைக்கும் சுவையே தனிதான். மேலும் இட்லிப் பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் அரைக்க நேரமில்லாத சமையத்தில் சமாளிக்க உதவியாக இருக்கும். என்னதான் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் இட்லி பொடிகள் கிடைத்தாலும் வீட்டில் ஃபிரெஷாக அரைக்கும் பொடிக்கு வாசனையே…









