மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான காப்பீடு தேதியை 30ம் தேதி வரை நீடிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
சென்னை:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கொளப்பாக்கம் கணேஷ் நகர் பகுதியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் நகர் மணப்பாக்கத்தில் சுமார் 500 வீடுகள் கன மழையால் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். இப்போது மழை கொஞ்சமாகதான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்கி 10 நாட்கள்தான் ஆகியுள்ளது. கனமழை பெய்யவில்லை. அந்த அளவுக்கு…









